வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் காயம்

சற்று முன்னர் வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 21 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமாணப்பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டடம் இடிந்து விழுந்தததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!