எம்.ஐ.எம்.மொகிதீன் எழுதிய நூல்வெளியீடு சனியன்று கொழும்பில்

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் முன்னாள் இணைச்செயலாளரும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (MULF) ஸ்தாபகச் செயலாளர் நாயகமும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், இனத்துவ முரண்பாட்டு மாற்றமைவுக்கான தமிழ், முஸ்லிம் அமைதிக்குழுவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளருமாகவும்,முஸ்லிம்களுக்கான அமைதிச்செயலகத்தின் செயலாளர் நாயகமுமாக கடந்த காலங்களில் செயல்பட்ட, நில,கட்டிட அளவையாளர் எம்.ஐ.எம்.மொகிதீன் எழுதிய‘இலங்கையில் இன முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் (20) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு டீ. ஆர் விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

சித்திலெப்பை ஆய்வுமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக எம்.ஐ.எம்.மொகிதீன், சிறப்பதிதியாக முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவுத், விஷேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுஹைர்,சிறப்புப்பேச்சாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில், நில,கட்டிட அளவையாளர் எம்.ஐ.எம்.மொகிதீன் செய்த சேவைக்காக அவரைப் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் அன்பாய் அழைக்கிறது சித்திலெப்பை ஆய்வு மன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!