இன முறுகலை ஏற்படுத்த சில பௌத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்; – கொஹிலாவத்தை பள்ளிவாசல் உரையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

எமது நாட்டிலுள்ள மக்களுக்குள் ஒரு போதும் குரோதங்கள் தோன்றவில்லை. வெளிச்சக்தி களின் தலையீடுகளே எம்மை பிரித்தாளுகின்றது.

நாம் இலங்கையர்கள் முன்பு வடக்குகிழக்கு, மாகாணங்கள் இந்தியாவின் கொலனி போன்று ஆக்கப்பட்டது போல் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வெளிச்சக்திகள் முனைகின்றன. இதற்க்கு சிங்கள முஸ்லீம் இனக்கலவரம் ஒன்று அவசியமாகிறது. இதற்காக சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் இடம் பெறுவதை நாம் உணரந்த கொள்ள வேண்டும்.
இங்கு நாம் எல்லோரும் சகோதரர்களாக ஒன்று கூடி இருக்கிறோம் எம்மில் வேற்றுமை இல்லை. மதங்கள் தர்மத்தையே போதிக்கின்றன. எம்மை குழப்ப எங்கோ திட்டமிடப்படுகிறது என்பதை உணர வைப்பதே நமது பணி இவரகளுக்கு தேவை இருக்கிறது பொலநறுவை ஏழைகளின் குடிசைகளை துவம்சம் செய்கிறார்கள்.
அவர்கள் என்ன செய்தார்கள்? யுத்தம் நிறைவடைந்த கையோடு இந்த நாட்டை பிளவு படு்த்த சக்திகள் தயாராகி விட்டன. இவற்றை உணர்ந்து நாம் ஒற்றுமையோடு வாழ வழி வகைகளை மேற் கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்துக்கு கொடிக்காவத்தை விகாரையினுடைய விகாரதிபதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பள்ளி நிருவாகிகள், பிரதேசத்தை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அணைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!