ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக்காட்சியில் நடிக்க சொன்னபோது, “அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன்” என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் சிரித்தார்கள். செய்ய மாட்டேன் என்று சொல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருந்ததாக முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.
அவர் எவ்வாறு ஆபாசப்படத்துறைக்கு வந்தார், அவரது அனுபவங்கள், அதிலிருந்து வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியின் தொகுப்பு:
கேள்வி: நீங்கள் மிகவும் பிரபலமாக பெண். இன்ஸ்டகிராமில் உங்களை மில்லியன் கணக்கான மக்கள் பின் தொடர்கிறார்கள். ஆபாசப் படங்களில் நீங்கள் நடித்தது இந்த புகழுக்கு அடிப்படையாக இருக்கிறது. இதனை கையாள உங்களுக்கு கடினமாக இருக்கிறதா?
ஆம். நான் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு என் இன்ஸ்டகிராம் பக்கம் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களால் ஹேக் செய்யப்பட்டது.
பிறகு நான் இன்ஸ்டகிராமில் இருந்த வெளியே வந்துவிட்டேன். என் விதி என்ன என்பதை ஒப்புக் கொண்டு, நான் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிணேன். சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் நான் அதில் அக்கவுன்ட தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆபாசப்பட நடிகையாக இல்லாமல், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தேன்.
கேள்வி: உங்கள் பெயரை கூகுளில் தேடும் போது, உங்கள் ஆபாசப் படங்கள் குறித்து ஆயிரக்கணக்கான இணைப்புகளும், காணொளிகளும் வருகின்றன. எப்படி முயற்சித்தாலும் உங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியாதே… இன்றைய இணைய தொழில்நுட்பத்தில் அது எப்படி சாத்தியமாகும்?
நான் அதிலிருந்து வெளிவர முயற்சிக்கிறேன்.
கேள்வி: நீங்கள் லெபனானில் பிறந்துள்ளீர்கள். பின்னர் உங்கள் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு வந்தீர்கள். அமெரிக்காவில் பள்ளி முடித்து, கல்லூரியில் வரலாறு பாடம் படித்துள்ளீர்கள். ஆபாசத்துறைக்குள் வர முடிவு செய்தது ஏன்?
நான் என் சிறு வயது முழுவதும் மிகவும் பருமனாக இருந்தேன். ஆண்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான் கவர்ச்சிகரமாக இல்லை என்று நினைப்பேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு நான் எடையை குறைக்க தொடங்கினேன். பட்டம் முடித்தவுடன் என்னில் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். சுமார் 50 பவுண்டுகள் வரை எடை குறைத்தேன்.
மிகவும் பெரிதாக இருந்த என் மார்பகங்கள், சரியான அளவிற்கு மாறின. திடீரென ஆண்கள் பார்வை என் பக்கம் திரும்பியது. நான் அதற்கு பழக்கப்பட்டவள் அல்ல. முதன்முதலில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. என்னை அவர்கள் புகழ்ந்து பேசியதை முதல் முறையாக கேட்டேன். எனக்கு அவை பிடித்திருந்தது.
கேள்வி: நீங்கள் பட்டம் முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் வந்து உங்களிடம் ஆபாசத்துறையில் சேர்ந்து பணிபுரியலாம் என்று கேட்டுள்ளார். நீங்கள் பதறிப்போய் அதிலிருந்து விலகாமல், அதற்கு ஒப்புக் கொண்டது எப்படி?
ப: இல்லை. அப்படி இல்லை. திடீரென ஒருவர் வந்து என்னை ஆபாசப் படங்களில் நடிக்க அழைக்கவில்லை. என்னை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், மாடலிங் செய்கிறீர்களா? உங்கள் உடற்கட்டு நன்றாக இருக்கிறது. நிர்வாண மாடலாக நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.
பிறகு நான் மியாமியில் உள்ள அழகான இடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டேன். மிகவும் சுத்தமாக இருந்தது. அங்கு வேலை செய்தவர்கள் என்னிடம் நன்றாக பேசினார்கள். அவர்களது அறைகளில் எல்லாம் அவர்களது குடும்பப் புகைப்படங்கள் இருந்தன. நான் சங்கடமாக உணரவில்லை.
கேள்வி: உங்களை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமா? பணம் சம்பாதிக்கும் கருவியாக உங்களை பயன்படுத்தினார்களா?
ப: கண்டிப்பாக ஆம்.
கேள்வி: உங்களுக்கு யாரும் அறிவுரை வழங்கவில்லையா? நீங்கள் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளவில்லையா?
ப: எனக்கு அப்போது 21 வயது. எந்த 21 வயது பெண் தனக்கு வழக்கறிஞரை வைத்திருப்பார்.
ஆபாசப்படங்களில் நடித்தபோதும் எனக்கு சரிசம ஊதியம் கிடைக்கவில்லை: மியா கலிஃபா
தன் மீதான பாலியல் துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்
கேள்வி: உங்களுக்கு எப்படியான மன அழுத்தம் இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன். தற்போது அதெல்லாம் முடிந்து பல காலம் ஆகிவிட்டது. தற்போதும் அந்த மன அழுத்தம் இருக்கிறதா?
ப: ஆம். இருக்கிறது. பெரும்பாலும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது அதை நான் அதிகமாக உணர்கிறேன். மக்கள் என்னை பார்க்கும் விதம், ஏதோ அவர்களால் என் ஆடைக்குள் பார்க்க முடிகிறது போல தோன்றுகிறது. மேலும், மிகுந்த அவமானமாக உணர்கிறேன்.
எனக்கு தனியுரிமை சுதந்திரமே இல்லை என்று தோன்றுகிறது. ஒரு பக்கத்தில் அதுவும் உண்மைதான். ஒரே ஒரு கூகுள் தேடலில், என் குறித்த மொத்த தகவல்களும் வந்துவிடும்.
கேள்வி: நீங்கள் இணையத்தில் இருக்கும் புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு உங்களுக்கு உரிமை இருக்காது. அது மிகவும் கடினமானதாக இருக்கும். இது உங்கள் நிலைமை மட்டுமல்ல, ஆபாசப்படங்களில் நடிக்கும் மற்ற பெண்களின் நிலையும் இப்படி இருக்கலாம்.
ப: ஆம். என் பேட்டி வெளிவந்த பிறகுதான் நான் அதை உணரத் தொடங்கினேன். பல பேர் இது சம்பந்தமாக என்னை தொடர்பு கொண்டார்கள். எனக்கு இதுதொடர்பாக பல இ-மெயில்கள் வந்தன.
பல பெண்களும் கடத்தப்பட்டு, ஆபாசப் படங்களில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பல பெண்களின் வாழ்க்கை இதனால் மோசமாகியுள்ளது. பல ஆண்கள் இந்தப் பெண்களை பயன்படுத்துகிறார்கள்.
அந்தப் பெண்களுக்கு புரிந்திராத ஒப்பந்தங்களை கையெழுத்திட வைக்கிறார்கள்.
அப்போதுதான், நான் இதுகுறித்து வெளியே பேசியது நல்ல விஷயம் என்று நினைக்கத் தொடங்கினேன்.
கேள்வி: ஒரு காணொளியில் நீங்கள் முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் ஹிஜாப் அணிந்து கொண்டு நடித்த ஆபாசக் காட்சி இருக்கும். அது மக்களிடையே கோபத்தை தூண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ப: அப்படி ஒரு காட்சியால் நான் கொல்லப்பட போகிறேன் என்றே நான் அவர்களிடம் கூறினேன்.
கேள்வி: அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?
ப: அவர்கள் சிரித்தார்கள்.
கேள்வி: நான் செய்யமாட்டேன் என்று அப்போது நீங்கள் ஏன் சொல்லவில்லை?
ப: நான் பயந்தேன். நான் மாட்டேன் என்று சொல்லி இருந்தால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி இருக்க மாட்டார்கள். ஆனால், நான் பயந்தேன்.
நீங்கள் எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு ஹோட்டலில் உணவு நன்றாக இல்லை என்றாலும், வெயிட்டர் வந்து கேட்கும்போது, உண்மையை சொல்ல தயங்கி, உணவு நன்றாக இருக்கிறது என்று கூறியிருப்பீர்கள்.
அதுபோலதான். செய்ய மாட்டேன் என்று சொல்ல எனக்கு பயமாக இருந்தது. தயக்கமாக இருந்தது.
கேள்வி: அந்தக் குறிப்பிட்ட காணொளியில் நடித்து முடித்துவிட்டு வெளியே வரும்போது, இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்தீர்களா?
ப: நடித்து முடித்துவிட்டு வந்த அடுத்த நாள் வரை எனக்கு தோன்றவில்லை. ஆனால், அது வெளியான பின்னர் என் உலகமே இடிந்துவிட்டது.
ஆபாசப் படங்களில் நடிப்பதை நான் ரகசியமாக செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன். லட்சக் கணக்கான பெண்கள் இதை செய்கிறார்கள். ஆனால் யாருக்கும் யார் பெயரும் தெரியாது. பார்ப்பவர்களும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், நான் அதில் நடித்த பிறகு நிலைமை அப்படியில்லை.
கேள்வி: அதை படம் பிடித்தவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இது லாபம். மில்லியன் கணக்கான மக்கள் அதை பார்த்திருக்கிறார்கள். ஆனால், உங்களின் உண்மை நிலை, உங்கள் முகம் அனைவருக்கும் தெரிந்து போனது. ஹிஜாப் அணிந்து ஆபாசக் காட்சிகளில் நடித்த நடிகையாக அறியப்பட்டீர்கள். உங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ப: ஆம். ஐஎஸ்ஐஎஸ் என்னை மிரட்டினார்கள் என்று நான் சொல்லப்போவதில்லை. அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் மிரட்டினார்கள்.
கேள்வி: நீங்கள் அப்போது எவ்வளவு தனிமையாக உணர்ந்திருப்பீர்கள். நிச்சயம் உங்களால், இதனை உங்கள் குடும்பத்திடம் கூட கலந்து பேச முடியாது.
ப: ஆம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
கேள்வி: ஆபாசப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று எடுத்த முடிவு குறித்து சொல்லுங்கள்.
ப: நான் அப்போதும் தயக்கமாக உணர்ந்தேன். என் ராஜிநாமாவை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று பயந்தேன். ஒரு மாதம் கழித்து நான் ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, அவர்களிடம் என் ராஜிநாமா கடிதத்தை அளித்தேன். நான் எப்படி உணர்கிறேன் என்று கூறினேன்.
என்னை போக வேண்டாம், இதெல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். நான் இதுகுறித்து அதிகம் யோசிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
கேள்வி: உலகின் பல்வேறு நாடுகளில் ஆபாசப்படங்கள் பார்ப்பது, அல்லது இது தொடர்பான இணையதளங்களால், பல்வேறு உறவுகள் பாதிக்கப்படுகின்றன. இளைஞர்கள் ஒரு உறவை பார்க்கும் பார்வை இதனால் மாறியிருக்கிறது. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: உண்மைதான். இதனால் உறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு அடிமையாகி இருப்பது, அதிகமாகியிருக்கிறது. ஆண்கள் ஆபாச வீடியோக்களில் பார்க்கும் விஷயங்களை, அவர்கள் வாழ்வில் இருக்கும் பெண்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது.
கேள்வி: இணையத்தில் உங்கள் புகைப்படங்கள் இன்றும் இருக்கின்றன. உங்களால் இதிலிருந்து நகர்ந்து செல்ல முடிந்ததா? வேறு ஒரு பணி? உங்களை ஆபாசப்பட நடிகையாக பார்க்காத மக்களை சந்திக்க முடிந்ததா?
ப: என்னை பற்றி எதுவுமே அறிந்திராக ஆண் ஒருவரை சந்தித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பிறகு நான் யார் என்பதை அவரிடம் கூறினேன்.
பின்னர் அவர் என்னை பற்றி கூகுள் செய்ததாக சொன்னார். ஆம். எனக்கு யாரையாவது காதலிப்பது கடினமானதாக இருந்தது.
எனக்கான ஆணை தேடுவது கடினமானதாக இல்லை. ஆனால், இந்த வட்டத்திற்குள் இல்லாத ஒருவரை பார்ப்பது கடினமாக இருந்தது.
நன்றி : பிபிசி
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More