2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்.
கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது  என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்சியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால். கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. கொரோனா பரவாமல்  தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். கொரோனாவால் ஏற்பட்டுள்ள   பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது.
உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது.  கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்.
நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும்.
நபார்டு, சிட்பி, என்.ஹெச்.பி வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விவசாயம், சிறுகுறு தொழில் கடன் வழங்க சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும்.  வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான், ஜெர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார அளவிற்கு உலகம் முழுவதும் சரிவு இருக்கும். ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம். சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு 60 சதவீதம் கூடுதலாக நிதி உதவி . அதாவது அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்.
இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!