இந்தியாவில் 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி !

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுதில்லி உள்ள
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,445 பேர் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள். 76 சதவீதம் ஆண்களுக்கும், 24 சதவீதம் பெண்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. பலியானவர்களில் 63 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 30 சதவீதம். 40 வயதுக்கும் குறைவானவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 7 சதவீதம்.மாநிலங்களுக்கான தேசிய நல்வாழ்வு ஒதுக்கீட்டிலிருந்து ரூ. 1,100 கோடி  விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ. 3,000 கோடி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் வெறும் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
இதில், தெற்கு தில்லி தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 320 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாவட்ட வாரியாக கரோனா பாதித்தவர்களின் பட்டியலை மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாவட்டங்களில், கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 4,067ல் 1,386 பேர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தெற்கு தில்லியை அடுத்து மும்பை 298 கரோனா நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கேரளாவின் காசர்கோடு, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், தெலங்கானாவின் ஹைதராபாத் ஆகிய மாவட்டங்களில் தலா  100 நோயாளிகள்  உள்ளனர்.
இது மட்டுமல்லாமல், ஆமதாபாத், கன்னூர், புணே, ஜெய்ப்பூர், சென்னை, யாதாரி மற்றும் கௌதம் புத் நகர் மாவட்டங்களிலும் 50க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர்.
மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி ஆகியவை தலா 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் உள்ளன. தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு சூழ்நிலை என்பது மிக வேகமாக மாறி வருகிறது.
ஏப்ரல் 14ம் தேதியுடன் நாடு முழுவதும் ஊரடங்கு நிறைவுக்கு வரவிருக்கும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை கணக்கெடுத்து அங்கெல்லாம் ஊரடங்கை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த 12 மாவட்டங்களின் பட்டியல்..
1. தெற்கு தில்லி  – 320,
2. மும்பை – 298, 3. காசர்கோடு – 136, 4. ஹைதராபாத் – 113, 5. இந்தூர் – 110, 6. சென்னை – 81, 7. புணே – 62, 8. கௌதம் புத் நகர் – 55, 9. ஜெய்ப்பூர் – 54, 10. ஆமதாபாத் – 53, 11. யாதாரி – 52, 12. கன்னூர் – 52 ஆகிய மாவட்டங்களில் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!