கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலால் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் இல்லை ராணுவம் அறிவிப்பு

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலால் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை ராணுவம் மறுத்துள்ளது.
இதுதொடா்பாக பொது தகவலுக்கான ராணுவ கூடுதல் இயக்குநா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலால் ஏப்ரல் மாத மத்தியில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாகவும், கரோனா நோய்த்தொற்று சூழலில் அரசுக்கு உதவிட ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றோா், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டோா் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொய்யான, தீங்கிழைக்கக்கூடிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை’ என்று தெரிவித்தாா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!