இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்  கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு காப்பீடு வழங்கப்படும்
இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக  இருக்கிறது  ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு
80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வங்கியில் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே  இலவசமாக வழங்கப்படும்
20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்அதிரடி அறிவிப்புகள்
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு காப்பீடு வழங்கப்படும். மேலும் 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதி துறை இணை அமைச்சர் ஆகியோர் கூட்டாக நேற்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் அவர்கள் கூறியதாவது :
இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தியா முழுவதும்  ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வங்கியில் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே  இலவசமாக வழங்கப்படும்.
மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம்  5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம்  5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.
ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும்.  இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.
மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
 வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ள முடியும்.
 கட்டடத் தொழிலாளர்களுக்கு நல நிதியில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கும்.
முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும்,
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும
கரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுமக்களுக்கான பல உதவிகளை அறிவித்து வருகிறார்.
அப்போது, கரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.  உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக எசமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு. விவசாயிகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்படும்.  யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர் என
என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!