மாவட்டம் தோறும் கொரோனா தொடர்பான உதவி எண்கள் அமைக்கப்படும் தடை உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்க என மத்திய அரசு அறிவுரை

இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு மாதம் 7 கிலோ ரேஷன் வழங்கும் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு பயனளிக்கும் உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது, சமூக விலகல் நடைமுறைப்படி அமைச்சர்கள் அருகருகே அமராமல் இடைவேளிவிட்டு அமர்ந்திருந்தனர். ஊரடங்கு நிலைமை குறித்தும் கேபினன்ட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு பயனளிக்கும் உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் படி, அடுத்த 3 மாதங்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் 7 கிலோ ரேஷன் பொருட்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு ரூ. 37க்கு மாறாக அரிசி கிலோ ரூ.3-க்கும், ரூ. 27க்கு மாறாக கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும்,
மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஜவுளித் துறை ஏற்றுமதிக்கான மத்திய, மாநில அரசுகளின் வரிகளை தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்டம் தோறும், விரைவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தடை உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்க என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!