பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றிய அமைச்சர்கள்

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு கூட்டம் புதுதில்லியில்  நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியைப் பின்பற்றிய அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு  உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதுமே அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில், அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் அனைவரும், அருகருகே அமராமல் இடைவெளி விட்டு நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.
இவ்வாறு மத்திய மந்திரிகள் சமூக விலகலை பின்பற்றியது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!