பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை !

மேலும் தொடர்ச்சியாக பதட்டமான சூழ்நிலை நிலவி வந்ததால் மாநகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு பணிக்காக சேலம், ஈரோடு, திருச்சி, சிவகங்கை, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மாநகர போலீசாருடன் இணைந்து பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகரில் மட்டும் 1,500 போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கேரளாவில் இருந்து கோவையில் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இவர்கள் கோவையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அசம்பாவிதங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, மாநகர் மற்றும் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், மாநகர எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள். சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் மாவட்டம் மற்றும் மாநகருக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே நகருக்குள் அனுமதிக்கின்றனர்.

நேற்று இரவு கோவை மாநகரில் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் விடிய விடிய போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரவு மாநகரில் ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1,100 போலீசாரும் விடிய விடிய பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநகரில் முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!