உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள்.

Girl measuring her waist

இன்று எம்மில் பலர்  எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக உடல் எடை அதிகரிப்பு காணப்படுகின்றது.உடல் எடை அதிகரிப்பு என்பது நாம் உண்ணும் உணவின் மீதமாக உள்ள சக்தியின் அளவு அதிகரித்து சேமிக்கப்படும் கொழுப்பானது படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருதல் எனப்படுகின்றது.எனினும் சிலருக்கு இவ் உடல் எடை அதிகரிப்பானது ஹார்மோன் காரணமாகவும் ஏற்படலாம்.உடல் எடை அதிகரிப்பினால் ஆரோக்கியம் கெட்டு உயர் ரத்த அழுத்தம் மூட்டு வியாதி ,சக்கரை வியாதி போன்ற நோய்களும் ஏற்பட இடமுண்டு.

உடல் எடையைக் குறைப்பதற்கான  பொதுவான ஆலோசனைகள்
 • தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் பருகுதல்.
 • வேகமாக நடத்தல்,ஸ்போட் ஜாக்கிங்,சைக்ளிங் போன்ற உடற்பயிற்சிகளை  மேற்கொள்ளல்.
 • உரிய நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.(காலை  8-9, மதிய உணவு 12-1, இரவு 7-9)
 • பச்சை காய் கறிகள் சேர்ந்த உணவு வகைகளை உட்கொள்ளவேண்டும்.
 • பகலில் உறங்குவதை தவிர்த்தல்.
 • உப்புள்ள , எண்ணெய் மற்றும் நொறுக்குத் தீனிகள் உண்ணுவதைத் தவிர்த்தல்,
 • இரவில் உணவு உட்கொண்ட பின்னர் குறுநடை  செய்த பின் உறங்க செல்லல்.
 • இரவில் அதிகம் தூங்குதல் வேண்டும்.
 • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகளான ஆப்பிள் வினிகர்,எலுமிச்சை சாறு,பழச்சாறு,காய் கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ணுதல்.
 • உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளான அதிக ஒமேகா – 3 மற்றும் புரோட்டின் உணவுகளைச்  சாப்பிடுதல் வேண்டும்.
உடல் எடை குறைக்கும் உணவு முறைகள்
 • தினமும் ஆப்பிள் பழம் உண்ண வேண்டும்.பச்சை கிரான்னி ஸ்மித் ஆப்பிள்களில் அதிகம் உள்ள செரிமானம் ஆகாத மூலக்கூறுகல், பெருங் குடல் பகுதியில் நன்மை பயக்கும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி புரிகின்றன. மேலும், இந்த ஆப்பிள்களில் நார்ச்சத்து, பாலிபெனோல்ஸ், குறைவான கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவையும் இதற்கு உதவி புரிகின்றன.
 • அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொள்ளல்.
 • பழங்கள்,காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் என்பவற்றை உட்கொள்ளல்.
 • திடஉணவின் அளவை குறைத்து அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுதல். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் பருகுதல்.
உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத முறைகள்.
 • மிதமான சூடுள்ள நீரில், அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவர உடல் எடை குறையும்.
 • பகலில் தூங்கினால் ஊளைச்சதை ஏற்படும். இரவில் மட்டுமே தூங்க வேண்டும்.
 • காலை எழுந்தவுடன்  மூச்சுப் பயிற்சியைச் செய்து பழக வேண்டும். இதனால், உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். உடலில் ரத்தம் தேக்கம் அடையாமல் சீராக உடல் முழுவதும் பாயும். உடல் தசை வலுபெற்று, கொழுப்பு கரையும்.
உடல் எடை குறைக்க உதவும் பழங்கள்.
 • அவகோடா : அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோடு இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
 • தர்பூசணி : தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
 • பேரிக்காய் : பேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்திடுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும்.
 • ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் லெப்டின் மற்றும் அடிபோநிக்டின் என்பது  ஹார்மோனை அதிகரிக்கிறது. இவை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு கொழுப்பினை கரைக்க உதவுகிறது. அதோடு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி என்சைம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகிறது
 • எலுமிச்சை : எலுமிச்சை பழம் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துவோம். எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதோடு உணவு செரிக்கவும் உதவுகிறது.
 • மாதுளம் பழம் : மாதுளம் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினையும் நீக்க உதவுகிறது.
 • ஆரஞ்சு : ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இவை நம் உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவிடும். அதோடு இதிலிருக்கும் புரதச்சத்து நமக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. இதனால் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றாது. அதே போல இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் அவை உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 • திராட்சை : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதோடு சர்க்கரையும் இருப்பதால் இவை எனர்ஜியை தரக்கூடும். காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.
 • அன்னாசிப்பழம் : உடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் , மினரல்ஸ்,விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலைன் என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. ‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.

 

(எம்.பி.சாஹிறா பானு)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!