டெங்கை ஒழிக்க களத்தில் காரைதீவு வைத்திய அதிகாரிகள்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரையின் கீழ் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து மேற்கொள்ளும் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் பொருட்டு தொடர்ச்சியாக கொள்கலன் சேகரிப்பு நிகழ்வுகள் மற்றும் கள பரிசோதனை நடவடிக்கைகள் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி நிர்வாக பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் ; எமது அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம், ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும், ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு, நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள். மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் குளிர்சாதனப் பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள், சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள், கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள், குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள், நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள் போன்றவற்றில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன,

எனவே குறிப்பிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன். சுத்தம் செய்ய தவரும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மனவர்த்ததுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

நூருல் ஹுதா உமர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives