எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு…..++++
கொட்டாவ பஸ் நிலையத்திற்கு அருகில் எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ பெரேரா என்ற மின் பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் இன்று (12) காலை கொட்டாவ நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரதான பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்திற்கு தனது மகனுடன் சென்றதாக கூறப்படுகிறது.
அதற்காக ஏராளமானோர் வந்து வரிசையில் காத்திருந்தனர், உயிரிழந்த நபரும் காரில் வந்து எரிவாயு சிலிண்டர் வாங்கும் எண்ணத்தில் அங்கு காத்திருந்தார்.
சுகவீனமுற்ற நபர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More