பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலையில் இருக்கும் பேன் பொடுகு தொல்லையால் அவதிபடுவது இயற்கையான ஒரு விஷயம்தான்.
எவ்வளவுதான் செயற்கையாக தயாரிக்கும் விலை உயர்ந்த ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்தினாலும், இந்த பேன் சில பேருக்கு நிரந்தரமாக போகவே போகாது. அப்படியே பேன் தொல்லையில் இருந்து விடுபட செயற்கை முறையில் ஏதேனும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், ஆனால் நிரந்தரமாக போகாது.
மீண்டும் அடுத்தவாரம் பேன் தொல்லையும் பொடுகுத் தொல்லையும் திரும்பவும் வர ஆரம்பிக்கும். எனவே இவற்றை இயற்கைமுறையில் நீக்க ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை வேர்களில் படும்படி தேய்த்து, காய்ந்ததும் தலைக்குக் குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
- கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும். கற்பூரத்தில் இருக்கும் ஆண்டி – பாராசிடிக் என்ற வேதிப்பொருள் பேன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை இருக்காது.
- பூண்டை நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலையில் சீராக அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் பேன்கள் அகலும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
- பெட்ரோலியம் ஜெல்லி எனப்படும் வாஸ்லினை வேர்களில் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை தேங்காய் எண்ணெய் தடவி பேன் சீப் கொண்டு வாரினால் அனைத்து பேன்களும் வந்துவிடும்.
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More