முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம் !

ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.

பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.

சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!