நிதியமைச்சர் ரவி கருநாயக்கா மஹிந்த ஆட்சியில் பட்ட கடனுக்கு என்ன நடந்தது என்று கூறுகின்றார் கேளுங்கள்..!

2011 ஆம் ஆண்டு மொத்தமாக பெறப்பட்ட கடன் 997.பில்லியன் ரூபா கடனாக பெறப்பட்டு அதிலே 994 பில்லியன் ரூபா பாவிக்கப்பட்டுள்ளது. இதன் படி அந்த ஆண்டு 3 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.
2012 ம் ஆண்டு மொத்தமாக பெறப்பட்ட கடன் 1139 பில்லியன் ரூபாயில் 1105 பில்லியன் ரூபா பாவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் 34 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு மொத்தமாக பெறப்பட்ட கடன் 1303 பில்லியன் ரூபாவில் 1286 பாவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டில் மொத்தமாக பெறப்பட்ட கடன் 1478 பில்லியன் ரூபாவில் 1425 பில்லியன் ரூபா பாவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 54 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த கடன் 1780 பில்லியன் ரூபாவில் 1749 பில்லியன் ரூபா பாவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 31 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு இந்த நல்லாட்சி மொத்தமாக பெற்றகடன் 1699 பில்லியன் ரூபாவாகும், அதில் 1319 பில்லியன் ரூபா பாவிக்கப்பட்டுள்ளது இதில் 380 பில்லியன் ரூபா பாவிக்கப்படாமல் உள்ளது.
380 பில்லியன் ரூபாவை பாவிக்காமல் பாதுகாத்ததினால் இந்த வருடத்தில் கடன் பெறும்போது 120 பில்லியன் ரூபாவை குறைத்து கடன்படுவோம், இதுதான் நல்லாட்சியில் கிடைத்த வெற்றி என்று கூறுகின்றார்.
இதிலிருந்து என்ன விளங்குகின்றது…!
மஹிந்த ஆட்சியில் வடக்கின் வசந்தம் என்றும் கிழக்கின் உதயம் என்றும் நடந்த அபிவிருத்திகளுக்கு ரவி கருணாநாயக்கா சாட்சி கூறி சென்றுள்ளார்.
தங்களுடைய ஆட்சியில் என்ன அபிவிருத்தி நடந்தது என்று மக்களுக்கு தெளிவு படுத்தப்படவில்லை, ஆனால் செலவு செய்யாமல் மிச்சம் பிடித்த தொகையை  நல்லாட்சியின் சாதனையாக கூறுகின்றார்.
இது பொருளாதார வழர்ச்சி என்று வேறும் கூறுகின்றார்.
நாட்டில் இன்று விலைவாசி அதிகரித்தது மட்டுமல்ல, வட்டி வீதங்களும் அதிகரித்து விட்டது.
மஹிந்த ஆட்சியில் டொலர் மார்கட் 129 ரூபாயிலிருந்தது இன்று டொலர் மார்கட் 149 ரூபாயில் நிற்கிறது இதுதான் நல்லாட்சியா..?
மஹிந்த கொள்ளையடித்தார் அதனை பிடிக்கப்போகின்றோம் என்று வந்தவர்கள் இன்றும் பிடித்துக்கொண்டுதான் உள்ளார்கள்..
ஆனால் மத்திய வங்கி முறி விற்றவிடயத்தில் பல பில்லியன் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
வாகன கோட்டா முறைகேட்டில் பல பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நஸ்டம் இதையெல்லாம் யாரிடம் போய் கூறுவது.
நல்லாட்சி நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!