இந்த இனவாதிகளுக்கு பின்னால் இருப்பது யார்…?

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பமானது, அவர்களுடைய அந்த போராட்டத்தில் நியாயமான காரணங்களும் உண்டு.
அந்த போராட்டத்துக்கு அன்றிருந்த தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களிடம் ஆதரவு கோரியபோது, அன்றிருந்த முஸ்லிம் தலைவர்களான் ரீ.பி.ஜாயா போன்றோர் அதற்கு இணக்கம் தெறிவிக்கவில்லை, காரணம் தமிழர்களுடை போராட்டம் நியாயமானதாக இருந்தாலும் அதற்கு முஸ்லிம்களும் ஆதரவு தெறிவிக்ககூடிய கலநிலவரம் இருக்கவில்லை, அப்படித்தான் அந்த போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிப்பார்களேயானால் சிங்கள மக்கள் மத்தியில் சிதறுன்று வாழும் மக்களின் நிலை பாதிப்படையலாம் என்ற காரணமும், பெரும்பாண்மை சிங்கள மக்களை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம் தகுதி பெறவில்லை என்ற காரணத்தினாலும் தமிழர்களுடைய போராட்டத்துக்கு நமது முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு கொடுக்க விரும்பியிருக்கவில்லை.

அதன் பிற்பாடு தமிழ் மக்களின் அகிம்சை வழி போராட்டம் ஆயுதபோராட்டமாக மாறியபோது கிழக்கில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதற்கு ஆதரவு தெறிவித்தது மட்டுமல்ல, ஆயுதபோராட்டத்தில் நேரடியாகவும் பங்குபற்றியிருந்தார்கள்.
அப்படியிருந்தும் அந்தக் காலப்பகுதியில் தமிழ் போராளிகள் முஸ்லிம் மக்களிடம் கப்பம் என்ற போர்வையில் சில அநியாயங்களை செய்யமுற்பட்டார்கள், இதனை அன்றய முஸ்லிம்கள் எதிர்த்தார்கள் அந்த எதிர்ப்பின் காரணமாக முஸ்லிம்களை தமிழ் ஆயுத குழுக்கள் சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாக்கினார்கள்.
இந்த நேரத்தில்தான் முஸ்லிங்கள் தனிக்கட்சியாக இயங்கி தமிழ் ஆயுத குழுக்களின் அராஜகத்தை உலகறியச் செய்தார்கள். இந்த நடவடிக்கைகள் தமிழ் குழுக்களை ஆத்திரமடையச் செய்தது, அதன் காரணமாக அப்பாவி முஸ்லிம்களின் மீதி காட்டுமிராண்டி தனத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.
இதன் காரணமாக தமிழ் மக்களிடமிருந்து முஸ்லிம் மக்கள் கொள்கையலவில் பிரிந்துவாழ நிற்பந்திக்கப்பட்டார்கள், அன்றிலிருந்து இன்றுவரை அந்த பகைமை வடுக்கலாகவே இருந்துவருகின்றது.
இப்படியான கசப்புணர்புகள் ஏற்படாது தமிழ் குழுக்கள் முஸ்லிம்களையும் இந்த போராட்டத்தில் இதய சுத்தியுடன் இணைத்து பயணித்திருந்தால் இன்று தமிழர்களுடைய போராட்டம் என்றோ வெற்றியடைந்திருக்கும், தமிழர்களுடைய போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் சிங்கள சமூகத்திடமிருந்து பல துன்பங்களை சந்திக்க நேர்ந்திருக்கும், அந்த துன்பங்களையும் சகித்துக் கொண்டு முஸ்லிம்கள் தமிழ் தரப்போடு சேர்ந்து போராடியிருந்தாள் இந்த யுத்தம் எப்பவோ முடிவுக்குவந்து இன்று தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் கிடைத்திருக்கும்.
அதன் தாப்பரியத்தை உணராத தமிழ் குழுக்கள் முஸ்லிம்களை பகடைக்காயாக பார்த்தார்கள் அதுதான் அவர்களுக்கு ஆப்பாகவும் அமைந்துவிட்டது.
முஸ்லிம் மக்கள் தமிழ் தரப்போடு சேர்ந்து போராடியிருந்தால் இலங்கை நாடு எப்போதோ பிரிந்திருக்கும் என்ற உண்மை சிங்கள மக்களுக்கு தெறிந்திருந்தும், அதில் ஒரு பிரிவினரான சிங்கள இனவாதிகள் இந்த நாட்டுக்கு எவ்வளவோ நஸ்டத்தை உண்டுபண்ணிய தமிழ் தரப்பை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு, இந்த நாடு பிளவுபடாபமல் பாதுகாத்த முஸ்லிம் மக்களை குறிவைத்து தாக்குவதன் மறுமம் என்னவென்றே தெறியாமலுள்ளது.
இந்த இனவாதிகளின் நோக்கம் சிங்கள நாட்டை பாதுகாப்பது அல்ல, மாறாக தாய் நாடு எப்படி போனாலும் பரவாயில்லை தங்களுடைய பக்கட்டுக்கள் நிறம்பினால் போதும் என்ற என்னத்தின் அடிப்படையில்தான் வெளிநாட்டு ஏஜண்டுகளின் பணத்துக்காக அவர்கள் சொல்லும் விடயங்களை இங்கே நிறைவேற்றி வருகின்றார்கள்.
இன்று உலகத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பல சதிகளை மேற்குலகம் செய்துவருகின்றது, அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களையும் பந்திக்கு இழுத்து ஆத்திரமூட்டி அதன் மூலம் அவர்களை ஆயுதம் ஏந்தவைத்து அதன் பிறகு அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி நிலைகுலைய வைத்துவிடலாம் என்ற கெட்ட நோக்கமே தவிர அவர்களுக்கு வேறொரு நோக்கமும் கிடையாது.
அதற்குத்தான் இந்த இனவாதிகள் இங்கே பயன்படுத்தப்படுகின்றார்கள் என்ற உண்மையை முஸ்லிம்கள் கூட இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே கவலைக்குறிய விடயமாகும்.
அதற்கு மேற்குலகின் சதித் திட்டங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஆட்சியாளர்களை கொண்டுவருவதும், அதற்கு ஒத்துப்போகத ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்கும்தான் இந்த ஏஜண்டுகளை மேற்குலகம் பயன்படுத்துகின்றது என்ற உண்மையை நமது சமூகம் கவணிக்கத் தவறிவிடுகின்றது.
ஆகவே உண்மையை ஆழமாக தேடிப்பார்த்து புரிந்து கொண்டால் எல்லா விடயங்களும் தெளிவாகிவிடும், முஸ்லிம்சமூகம் இந்த இனவாதிகள் யார்..? இந்த மேற்குலகத்தின் திட்டம் என்ன.?
முஸ்லிம்களை உலகத்தில் மேற்குலகம் என்னபாடு படுத்துகிறது போன்ற விடயங்களை கூர்ந்து கவணித்தால் சகல விடயங்களும் விளங்கிவிடும். தயவு செய்து நமது சமூகம் இதனை புரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பதே எங்கள் அவா…!
(எம்.எச்.எம்.இப்றாகீம்)
கல்முனை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!