இஸ்லாமிய தலைமைத்துவம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

“அல்கியாதா” என்ற அரபுப் பதம் தலைமைத்துவம் என்ற கருத்தினைத் தருகின்றது.வற்புறுத்தலில்லாத முறைகளினூடாக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் செயன்முறையாகும்.என கலாநிதி ஹிஷாம் தாலிப் தலைமைத்துவத்திற்கு வரைவிலக்கணம் வழங்குகின்றார்.மேலும் மனித இயல்போடு ஒன்றி்ச் செல்கின்ற மனித நடத்தையில் தாக்கம் செலுத்துகின்ற ,குறித்த இலக்கின்பால் வழிநடாத்திச் செல்கின்ற ஒரு கலை.செயற்திறன்மிக்க தலைமைத்துவமானது பின்வரும் பண்புகளில் அடங்கியிருத்தல் வேண்டும். எதிர்காலம் பற்றிய மனக் காட்சி ஒன்று இருத்தல் வேண்டும் ,அம் மனக்காட்சியை நோக்கி இயங்குவதற்கான அறிவுபூர்வமான செயல் உபாயங்கள் விருத்தி செய்யப்படல் வேண்டும், அவ்வாறு இயங்குவதற்கு அவசியமாகின்ற ஒத்துழைப்பையும் ,இணக்கத்தையும் அல்லது குழு முயற்சியையும் வழங்கக்கூடிய முக்கியமான கூட்டத்தினரின் ஆதரவைத் திரட்டுதல் வேண்டும். செயல் உபாயங்கள் அமுல்படுத்தும் விடயத்தில் முக்கிய பங்கெடுத்துத் தொழிற்படக்கூடிய ஆட்களை நல்ல முறையில் ஊக்குவித்தல் வேண்டும்.தலைமைத்துவத்தின் அவசியத்தைத் குர்ஆனும்,ஸூன்னாவும் வலியுறுத்தி நிற்கின்றன .”விசுவாசிகளே!நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் அவ்வாறே அல்லாஹ்வினுடைய தூதருக்கும்,உங்கள் தலைவர்களுக்கும் கட்டுப்படுங்கள்”(4:59)”உங்களில் மூன்று பேர் பயணம் மேற்கொண்டாலும் ஒருவரைத் தலைவராக நியமித்துக் கொள்ளட்டும்”(புகாரி)

தனித்துச் செயற்படுவதையும் ,பிரிந்து வாழ்வதையும் கண்டிக்கும் இஸ்லாம் சமூகமாக வாழ தலைமை அவசியம் எனக் கூறுகின்றது.தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் கருத்து முரண்பட்டு பிரிந்து நின்றவர்கள் போல் இருக்காதீர்கள்.சில முகங்கள் கருத்தும் ,சில முகங்கள் வெளிறியும் போகும் நாளில் கடுமையான வேதனை காணப்படுகின்றது.(3:105-106)நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.”கைகால்கள் துண்டிக்கப்பட்ட ஒர் அடிமை உங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு அவர் அல்குர்ஆனின் மூலம் உங்களை ஆள்வார் எனின் அவருக்கு நீங்கள் கட்டுப்படுங்கள் “மேற்படி போதனைகள் முஸ்லிம்கள் தங்களது விவகாரங்கள் சரிவர இடம்பெற தலைமைத்துவத்தை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வற்புறுத்துவதோடு,தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுமாறும் வேண்டுவதைக் காண முடிகின்றது.இயல்பிலேயே மனிதன் சேர்ந்து வாழும் நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான்.எனவே சமூகமின்றி வாழ்வது அவனுக்கு கடினமாகவுள்ளது.ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் பால் தேவையுடையவனாக இருக்கின்றான் .இவ்வாறு மனிதர்ளுக்கு மத்தியில் தேவை ,தொடர்புகள் அதிகரிக்கின்ற போது தலைமைத்துவமொன்று அவசியப்படுகின்றது.அந்தத் தலைமைத்துவம் சரியானதாக அமைதல் வேண்டும். இதனையே நபி ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
” நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்கள் உங்களில் ஒவ்வொருவரும் அவரது மேய்ப்பைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்”(புகாரி).
தலைமை என்பது ஒரு அமானிதமாகும் .ஒரு முறை அபூதர் அல்கிபாரி(ரலி)அவர்கள் நபி ஸல் (அலை )அவர்களிடம் வந்து என்னை ஏதேனும் ஒரு பகுதிக்கு ஆளுனராக நியமிக்கப்படமாட்டீர்களா எனக் கேட்டார்.அதற்கு நபி (ஸல்) அலை அவர்கள் ஸஹாபியின் தோல்களைத் தட்டி விட்டு அபூதர் அவர்களே!நீங்கள் பலவீனமானவர் .இந்தப் பொறுப்பு ஓர் அமானிதமாகும் .இறுதித்தீர்ப்பு நாளில் கண்ணியத்தை இழக்கின்ற நிலைக்கும்,அவமானமானதொரு நிலைக்கும் இட்டுச் சென்று விடும் .எனினும் இந்தப் பொறுப்பை அதன் எல்லாச் சுமைகளோடும் ஏற்றுக் கொண்டவைகளை நிறைவு செய்பவர்கள் காப்பாற்றப்படுவார்கள்”(முஸ்லிம்).

தலைவரைத் தெரிவு செய்வதும் ஒரு அமானிதமாகும்.பொருத்தமானவரை பொருத்தமான இடத்தில் வைக்கவில்லையாயின் அதுவும் அமானிதம் பேணப்படவில்லை என்பதையே!குறிக்கின்றது.”விசுவாசிகளே!உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களே!அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ்உங்களுக்கு கட்டளையிடுகின்றான்.”(4:59)

பொருத்தமான தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் விடயத்தில் யார் மெளனித்து விடுகிறாறோ அவர் “சாட்சியத்தை மறைத்தார் “ஆகின்றார்.”சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம்,எவரேனும் அதனை மறைத்தால் அவரது இருதயம் நிச்சயமாக பாவத்துக்குள்ளாகி விடுகிறது.நீங்கள் செய்யும் யாவற்றையும் அல்லாஹ் நன்கறிவான்”(2:283)

தலைவர்களுக்கு கட்டுப்படுமாறு கூறும் இஸ்லாம் தலைமைத்துவத்தை சில நிபந்தனைகளையிடுவதனூடாக கட்டுப்படுத்துகின்றது.இந்த வகையில் பல வரையரைகளை வைத்து தடுக்கின்றது.தலைவர் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும், மக்கள் மத்தியில் நீதியைக் கொண்டு தீர்ப்பிப்பவராக இருக்க வேண்டும், மக்களைப் பாவத்தைக் கொண்டு ஏவுபவராக இருக்கக் கூடாது.இந்நிபந்தனைகை மீறும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவது கடமையல்ல இதனைப் பற்றி நபி (ஸல்)பின்வருமாறு கூறினார்கள்.
” நிச்சயமாக கட்டுப்பாடு என்பது நன்மையான விவகாரங்களிலேயேதான்”(புகாரி).
அவர்கள் எத்தகையோரென்றால் பூமியில் அவர்களுக்கு நாம் சக்தியளித்தால் தொழுகையை அவர்கள் கடைபிடிப்பார்கள்.இன்னும் ஸகாத்தை கொடுப்பார்கள்.மேலும் நன்மையை ஏவி தீமையை விட்டும் மக்களைத் தடுப்பார்கள்(22:41)
மேற்படி குர்ஆன் வசனங்கள் இஸ்லாமிய தலைவர்கள் நெறிமுறைகளைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் மக்கள் மத்தியில் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டியதையும் வலியுறுத்தி நிற்கின்றன.

உலக மனிதர்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபி (ஸல்) அலை அவர்கள் ஒரு சிறந்த தலைவராக வாழ்ந்து காட்டினார்கள்.அவரிடம் குணவொழுக்கம் ,புத்திக்கூர்மை,நல்லாட்சி,பண்பு,பொறுமை,சகிப்புத்தன்மை,வாக்குமீறாமை ,வீரம்,உடற்பலம்,நல்லுணர்வு,அன்பு,உளப்பக்குவம்,தூரதிஷ்டி,ஆளுமை,சிறந்த முன்மாதிரி பல பண்புகளைப் பெற்றிருந்தார்கள் .தலைவருக்குரிய கடமைகளை அல்லாம அபுல்ஹஸன் அலி அல் மர்வாதி மார்க்க பொாருளாதார,அரசியல்,சமூகஅடிப்படையில்பத்தாகக் குறிப்பிடுகின்றார்.
*நாட்டின் இறைமையைப் பாதுகாத்தல்.
*விசுவாசிகள்,ஆலோசகர்களின் கருத்துக்களை எடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives