நிலையில்லாக் கூட்டும் நிர்க்கதியாகப்போகும் ஆதரவாளர்களும்..!

(கட்டுரை – Shifaan Bm, மருதமுனை)
அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டின் நம்பகத்தன்மை குறித்து நாம் ஆராய வேண்டிய நிர்க்கதியில் உள்ளோம். கடந்த சில ஆண்டுகளுக்குள் ஊடகங்களின் துணையுடன் இலங்கை முஸ்லிம் அரசியலில் உச்சம் தொட்டவர் றிசாட் பதியுதீன். கிழக்கிலும் கூட. வெறும் உணர்ச்சி அரசியலில் மிதந்து கிடக்கும் கிழக்கு மக்களின் நாடித்துடிப்பை அறியாதவராக றிசாட் இருக்கவும் முடியாது.

ஆனாலும் எம் கிழக்கு மக்கள் வெறும் வீர வசனங்களை மாத்திரம் வைத்து முடிவுக்கு வந்து விட முடியாது. பேசிய வசனங்களில் எத்தனை நடைமுறையில் சாத்தியமானது என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். அமைச்சரின் பின்ணணி என்ன? இவரின் ஆரம்ப கட்சி கூட்டு யார் யாருடையது? பிற்பட்ட காலத்தில் அக்கட்சியில் யார் யார் உள்ளார்கள்? இவர்கள் எந்த நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இணைந்து கொண்டார்கள்? இக்கூட்டு நிலைப்பதற்கான நிகழ்தகவு என்ன? என்ற விடையங்கள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் உனைஸ் பாரூக், ஹிஸ்புல்லாஹ், சுபையிர்,வை.எல்.எஸ். என்ற நீண்ட இணைப்பு இணைந்திருந்த போதிலும் பிற்பட்ட காலத்தில் அவர்கள் பிரிந்ததன் அர்த்தம் என்ன? இன்று கட்சியில் உள்ளவர்களில் அமீர் அலி தவிர்ந்த ஏனையோர் கட்சிக்காரர்களா? அல்லது சந்தர்ப்பவாதத்தால் சிக்கிக் கொண்டவர்களா? ஐ.தே.கா மஃரூப் , இஸ்காக்,தேசியபட்டியல் நவவி போன்றோரையும் நம்பியா கிழக்கு மக்கள்?
வடக்கில் மரிச்சுக்கட்டி எனும் வலைக்குள் மாட்டுக்கொண்ட அமைச்சர் றிசாட் தனது அமைச்சை ராஜினாமாச் செய்தால் “மாட்டில் இருந்து உண்ணி கழன்றுவிடுவதனைப் போல்” கிழக்கில் இருந்து றிசாட்டினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அதிகாரசபைத் தலைவர்களும் கழன்று விரண்டோடும் போது செயல் வீரர்களாக இணைந்து கொண்ட போராளிகள் உங்கள் நிலை? நடுத்தெருவிலே விடப்பட்டது போன்றாகிவிடுவீர்கள்.
ஆகவே போராளிகளாக இணைந்து கொண்ட நாங்கள் எமது நிலைப்பாடு தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். வெறும் “சிலுசிலுப்பு மாத்திரம் அல்ல அரசியல் பணியாரம் வேண்டும்” என்ற நிலையில் இருந்து எப்போது சிந்திக்கத் துவங்குகின்றோமோ அன்றிலிருந்து மாற்றத்தை நோக்கிப் பயணிக்கலாம். கிழக்கை கிழக்கு மக்கள் சக்தியும் கிழக்கு மக்கள் தலைவனும் ஆளும் போதே கிழக்குச் சுபீட்சம் பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!