பெண் கல்வியின் முக்கியத்துவம்

ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால்  முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக் கொள்ளும். சமுதாயத்தில் உள்ள அணைத்து பெண்களும் கல்வி கற்றுக் கொள்வதால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது. அதன் மூலம் முழு நாடும் வளர்ச்சிஅடைகிறது இப்படிக் கூறினார் இந்தியாவின் தேசத்தை சேர்ந்த மகாத்மா காந்தியடிகள்.

கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் கல்வியே என புலப்படும். கல்விக் கண் என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே மக்களின் கண்களை திறந்தது எனக் கூறலாம்.

சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்போதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பெண்களுக்கே அடிப்படை  வசதிகளும் உரிமைகளும் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களே அதிகமாக  ஆதிக்கதிலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் உரிமை மறுக்கப்பட்ட  காலத்தில்தான் இந்தியாவின் முதன் பெண் டொக்டராக திருமதி முத்துலட்சுமி ரெட்டி என்பவர் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த டொக்டராக பயிற்சி பெற்ற சரித்திரம் படைத்தனர். பின்னர் அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதன் முதல் இந்திய பெண்மணி (தென்னிந்திய பெண்மணி ) என்ற பெருமையும் இவரை சேரும்.

பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அரசாங்கம் அக்கால கட்டத்தில் பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என்று  எண்ணியதற்கு காரணங்கள் உண்டு. அறியாமை எனும் இருளில்  வேதனையுடன் காலங்கழித்த பெண்கள் சிந்திக்கவும் செயல்படவும் ஏதுவான கல்வி இல்லாமையினாலேயே உடன் கட்டை ஏறுதல், பால்ய விவாகம் , பெண் சிசு கொலை, தேவவாசி வாழ்க்கை போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளுக்கு  ஆளாகி அடிமைகளாக வாழ்ந்த அக்காலத்தில், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் வீறு கொண்டு எழுந்ததால் அரசாங்கம் அவர்களை ஊக்குவித்து வெளிநாடு சென்று கல்வி பயிலுவதற்கு வேண்டிய அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. சென்னையிலுள்ள அடையாறு புற்று நோய் மருத்துவமனை இவரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!