உள்ளூராட்சி தேர்தலில் இறங்க மகன் தந்தையிடம் அனுமதி கேட்டு செலவுக்கு பணமும் கேட்டிருக்கிறார்.
அதற்கு தந்தை உனக்கு அனுபவம் போதாது. நீ அனுபவ ரீதியாக நிறைய கற்க வேண்டும் என்றிருக்கிறார்.
அதற்கு மகன் “எனக்கு அதெல்லாம் தெரியும். நான் சமூக சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன். உன்னால் பணம் தர முடியுமா?” என்றிருக்கிறான்.
தந்தையும் மகனின் நல்ல நோக்கத்தை கெடுக்க விரும்பாமல் உனது எதிர்காலத்திற்காக கொஞ்சம் பணத்தை சேமித்து மேலே அந்த பரனில் வைத்திருக்கிறேன். அதனை எடுத்து செலவு செய் என்று இருக்கிறார்.
மகனும் அதனை எடுப்பதற்காக ஏணி ஒன்றை வைத்து மேலே ஏறும் போது தந்தையிடம் இந்த ஏணியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேலே செல்ல தந்தை ஏணியில் இருந்த கையை எடுத்துவிட்டார்.
ஏணி சறுகி மகன் கீழே விழுந்துவிட்டான். மகன் கோபத்தில் தந்தையை முறைத்துப் பார்க்க;
தந்தையோ சிரித்துக் கொண்டு..
“மகனே அரசியலில் இதுதான் முதல் பாடம்.
மேலே பணம் ஒன்றும் இல்லை.
அரசியல் என்று வந்துவிட்டால் சொந்த அப்பனாக இருந்தாலும் நம்பி விடாதே” என்றாராம்.
(Dr. Ziyad இன் Fb பதிவிலிருந்து)

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More