சுகாதாரம் என்பது சுகமான வாழ்வின் அடையாளமாகும்.

மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே  சுகாதாரம் ஆகும். சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும்.முதன் முதலில் 18ம் ,19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா போன்ற நாடுகளில் நிலவிய சுகாதாரமற்ற நிலைமை காரணமாகவே சுத்தம் பற்றிய கோட்பாட்டு முன்வைக்கப்பட்டது.

இறை பக்திக்கு அடுத்து வருவது தூய்மையே !.அசுத்தம் என்பது பாவம் என்றும் சுத்தம் ஒருவரை கடவுளிடம் நெருங்கி வரச் செய்யும் என்றும் அக்கால மக்களால் போற்றப்பட்டது. ஆரம்ப கால மக்கள்  இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம்  என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.ஆனால் இன்றைய நவீன காலகட்டக்  கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதிகரித்து வரும் சனத்தொகை,வளங்களின் குறைபாடு,பொருளாதார நெருக்கடிகள்  என்பவற்றின் விளைவால் சிறந்த சுகாதாரமானது குறைந்து கொண்டே வருகின்றது.இதற்குக் காரணம் இன்றைய கால மனிதர்கள் செயற்கையின் பால் அடிபனிந்தமையேயாகும்.

நற்சுகாதாரப் பழக்கமானது சீர்குலைவதற்குக் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே.அதாவது தற்காலத்தில் மனிதன் தன் தேவைகளை துரிதமாகப் பெற்றுக் கொள்வதைப்போல இன்றைய உணவு முறையும் துரிதமாகவே அமைந்துள்ளது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் கல்லறை வரை பங்களிப்புச் செய்யும் ஒரு காரணியாகக் காணப்படுகின்றது.மனிதனின் உயிர் வாழ்கைக்கு அடிப்படை ஆரோக்கியமாகும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது போல ஆரோக்கியமான வாழ்வை நோக்கி   பயனித்தல்  அத்தியாவசியமாகும்.

அந்த வகையில் மனிதனின் நலமான வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றுதான் உணவாகும்.நாம் உட்கொள்ளும் உணவானது ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் அவசியமானதாகும்.இதே போன்று நலமான வாழ்விற்கு  தூக்கமும் ஓய்வும் மிக அவசியமாகும். இரவுத் தூக்கத்தை பகல் தூக்கத்தால் ஈடு செய்ய முடியாது.இவ்வறான விடயங்களை கவனத்திற் கொள்லாமல் இருந்தால்  மனநோய்களும் ஏற்படும் என்று  ஆய்வார்கள்  அறிக்கை  வெளியிடுகின்றனர்.மக்களின் நலன் பேணும் பல நாடுகளில் மாலை ஏழு மணிக்கு மேல் அலுவலகங்களோ,கடைகளோ,குழந்தைகளுக்கான  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இயங்குவதில்லை. காலை நான்கு மணிக்கு மேல்  உறங்குவதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.அன்றைய காலத்தில் இரவு விளக்கு வைக்க முன் உணவருந்தி விட்டு முன்னிரவில் தூங்குங்கள் காலையில் கோழி கூப்பிட எழுந்து விடுங்கள் அதுவே ஆரோக்கிய வாழ்வாகும் என அக்கால மக்கள்  கூறுவார்கள்.இது நலமான வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் வழிமுறைகளாகும்.

மேலும்  நலமான வாழ்க்கைக்கு வழிகோலும் இன்னுமொரு காரணியாக  கழிவு வெளியேற்றம் என்பது கருதப்படுகின்றது.உணவு உண்பதும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம்.உணவுன்பதும்.நீரருந்துவதும்,இரவுத்தூக்கமும் ஓய்வும் சக மனிதர்களிடம் கொள்ளும் நட்புறவும்,  மன அமைதியும், புரிதலும் எனும் எல்லாமே கழிவு வெளியேற்றத்துடன் தொடர்புடையதாகும்.

மற்றும் ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக்கொள்வது  தொடர்பில் ஆய்வாளர்கள் ஐந்து வழிகளை சுட்டிக் காட்டுகிறார்கள்.  இவற்றில் முதலாவது சுத்தமாக இருத்தலாகும்.அதற்கு முக்கியமாக கைகளை கழுவுவதை சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது கைகளை சுத்தப்படுதாமையால் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்கு கீழுள்ள  சுமார் இருபது இலட்சம் குழந்தைகள் நியுமோனியா ,வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மூலம் இறந்து போவதாக ஆய்வுகள் விபரிக்கின்றன.கைகளை ஒழுங்காக கழுவுவதன் மூலம் எபோலா உயிர் கொல்லி நோய்கள் பரவுவதையும்  தடுக்கலாம்.இக்கை கழுவுதலை நோய்கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பிற்கான வழிமுறைகளாக அமெரிக்க மையங்கள் வலியுறுத்தி வருகின்றன.முக்கியமாக கழிப்பறையைப் பயன்படுத்திய பின், காயத்திற்கு மருந்து போடுவதற்கு முன்,பின்,தும்மிய பின், இருமிய பின், உணவு சாப்பிட முன், பின், குப்பைகளை கொட்டிய பின் விலங்குகளை தொட்டபின் என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு கைகளைப் பயன்படுத்தும் சந்தர்பங்கள் அதிகம் உள்ளன.இவ்வாறான எண்ணற்ற பல விடயங்களில் கைகளை கழுவ வேண்டி உள்ளது. சாதாரணமாக இருபது நொடிகள் கைகளை  தேய்த்து கழுவ வேண்டுமென ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரோக்கிய வாழ்விற்கான இரண்டாவது வழி சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும். சுத்தமான நீரினைப் பயன்படுத்துவதன் மூலம்  அசுத்தமான நீரினால் கிருமிகள் பெருகி கொலரா,வாயிற்றுப்போக்கு ஹைய்படைட்ஸ் நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப் படும்.அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஒரு வருடத்திற்கு சுமார் 170 கோடிபேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுகிறார்கள். ஆரோக்கிய வாழ்விற்கான மூன்றாவது அம்சம் சுத்தமான உணவை உட் கொள்ளுதல் ஆகும்.இன்றைய காலகட்டத்தில் சுகாதாரமான உணவு என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.சிறு குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே விரைவு உணவுகளை பழக்கபடுத்தி விடுகிறோம்.இதனால் பிள்ளைகள் பல நோய்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள்.

ஆரோக்கிய வாழ்விற்கான நான்காவது அம்சம் சிறந்த உடற்பயிற்சியாக  குறிப்பிடலாம்.அத்தோடு அதிகாலை சூரிய ஒளியின்  மூலம் கிடக்கும் வெளிச்சம் இவ்வாறான அடிப்படையில்  வாழும் போது சுத்தமாகவும் சுகவாழ்வுடனும் வாழ முடியும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!