சம்மாந்துறை ‘செட்’டில் பெற்றோல் பதுக்கல்; நடந்தது என்ன?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுமார் 4000 லீற்றருக்கு மேற்பட்ட எரிபொருளை (பெற்றோல் / டீசல்) இருப்பில் வைத்துக் கொண்டு எரிபொருள் முழுமையாக தீர்ந்துவிட்டாதாக உரிமையாளரினால் கூறப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்கையில், குறித்த நிரப்பு நிலையத்தில் சிறிதளவேனும் பெற்றோல் இருக்கலாம் என கருதி அவ்வூரில் உள்ள இளைஞர் அணியொன்று பெற்றோல் கேட்டுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்திலும், “எங்களிடம் ஒரு துளியளவும் பெற்றோல் இருப்பிலில்லை” என ஆணித்தரமாக கூறியிருக்கிறார் உரிமையாளர்.

குறித்த இளைஞர்கள் தற்போது நடைமுறையில் உணவளிப்பு மற்றும் தேவையுடையோருக்கான அத்தியவசிய சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றவர்களாவர்.

எனினும், ‘செட்’ உரிமையாளரின் அறிக்கையை பொய்யென உணர்ந்த அந்த இளைஞர் வர்க்கத்தினர் சுற்றும் சூழ வலைவீசி குறித்த ‘செட்’ இலிருந்து இரகசிய வியாபாரம் இடம்பெறுவதை அறிந்ததும் இடத்துக்கு உரிய அதிகாரிகளுடன் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பொதுமக்களையும் ஒன்று திரட்டி ‘செட்’ ஐ முற்றுகையிட்ட பின்னர் சுமார் 4000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் பதுக்கலில் உள்ளமையை அவதானித்ததாகவும், பின்னர் அதை மக்களுக்கு பகிர்ந்துள்ளதாகவும் அங்கிருந்த சமூகசெயற்பாட்டாளர் ஒருவர் ‘நியூஸ்ப்ளஸ்’ இற்கு தெரிவித்தார்.

இந்த நெருக்கடி காலத்தில் முழு தேசத்திலுமுள்ள நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives