நீரின் முக்கியத்துவம்: நீர் ஓர் உயிர் ஆதாரமாகும்.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வெப்பமடைந்த நீர் 

நீர்மின்சாரம், தொழிற்சாலைகளில் இயந்திரங்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காக நீரானது பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் நீர்த்தொகுதியுடன் இணைகின்றபோது அந்நீர் வெப்படைந்த நீராக மாற்றமடைகின்றது. குறிப்பிட்ட நீரில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாவதுடன், அது வேறோர் நீர்த்தொகுதியில் கலக்கின்றபோதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற அனல் மின் நிலையங்களினால், இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் கடலினுள் விடப்படுகின்றது. அதனால் மீன்வளம் பாதிப்படைவதுடன், அயற்சூழலிலும் தாக்கத்தை தோற்றுவிக்கின்றது.

இவ்வாறு  நீரானது மசடைவதனால் மனிதர்கள், விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களுமே பல்வேறு பதிப்புக்கு ஆளாகின்றனர். அதாவது

 •  மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல், தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியா, டெங்கு, யானைக்கால், மஞ்சட்காய்ச்சல், தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
 • நீரில் ரசாயண மாசுக்கள் கலப்பதனாலும், நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன், குடம்பிநிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன.
 •  சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆறுகள், குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது. சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகே அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது.
 •  நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர்விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணப் பகுதியில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசணத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசனத்தில் இனிவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு நீர் மாசடைதலைக் கட்டுபடுத்தும் முகமாக

 •  தகுந்த நீர்த்தேக்க முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.
 • தகுந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தையும் கழிவு நீர் அகற்றும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்துதல்.
 • அதிக மாசடைவை உண்டு பண்ணும் கைத்தொழில்களை கட்டுப்படுத்தவதுடன், அதற்கு மாற்றுவழிகளை சிறப்பாக நீர் சுத்திகரிக்கும் தொகுதிகளைக் கொண்டதாக அமைத்தல்.
 • விவசாயத்தில் இரசாயண உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அண்மைக்காலத்தில் விருத்தியடைந்துள்ள உயிரியல் தொழில்நுட்பத்துடனான உள்ளீடுகளையும், சேதனப் பசளைகளையும் பயன்படுத்துதல்.
 • நகர மற்றும் மக்கள் குடியிருப்புகள் அடர்த்தியாயுள்ள பிரதேசங்களில் முறையான மலசலக்கழிவு வெளியேற்றத்திற்கான பாதாளக் குழாய்களை அமைத்தல்.
 • நீர்பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதலும் தண்டனை வழங்குதலும்.
 • நீர்வளத்தின் முக்கியத்தவம், அது மாசடையும் வழிமுறைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்

போன்ற நடவடிக்கைகளை அரச, தனியார்  அமைப்புக்கள் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.ஏனெனில்  இன்றைய பெருகி வரும் மக்கள் தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு  வினாடியும் கடை பிடிக்க வேண்டிய  அவசரத்தில் அனைவரும் உள்ளோம் ” வெள்ளம் வரு முன்  அணை கட்டுவது போல்” வரும் முன் அந்நீர் பற்றாக் குறையை வராமல் தடுக்க வேண்டும் நீரின்றி தள்ளாடும் மக்கள் தொகையினர் எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்த போதிலும் தன் உயிரைப் பிடித்துக் கொண்டு  நீரினால் இறப்பதை நாம்  அனுமதிக்கக்கூடாது.

உலகில் பாதுகாப்பான நீரின்றின்ரி எட்டு செக்கன்களுக்கு  ஒரு குழந்தை என்ற ரீதியில் மரணமடைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்  குழந்தைகள் இறப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீரே முதற்காரனமாய்  அமைந்துள்ளது.

அத்தோடு உலகளாவிய ரீதியில் பார்க்கும் போதுவிவசாயத் துறைக்கு 85 % உம் கைத்தொழில் துறைக்கு  10%   பயன்படுத்தப்படுகின்றது.எஞ்சிய 5% மட்டுமே வீட்டுப்பவனைக்காக பயன்படுவதாக  ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்நிலையில்   எதிர் கால சந்ததியினருக்கு இவ் அருட் கொடையை  நாம் வழங்க வேண்டுமாயின் நீர் பாதுகாப்பு முறைகளை, சேமிப்பு முறைகளையும் மேற் கொள்ள  வேண்டும்.இது இன்றைய இளைஞ்சர்கள் மத்தியிலும் எதிர் கால சமூகத்தினரின் மத்தியிலும் பெரும் சவாலாக உருவாகியுள்ளது.

எது எவ்வாரெனினும்  ஒரு தனி மனிதனாய் என்னால் என்ன பங்களிப்பை மேற்கொள்ள முடியும்? என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து  செயற்பட்டால் ஒட்டு மொத்த சவால்களையும் எதிர்த்து நீரின் முக்கியத்துவத்தை இயன்றளவு பாதுகாக்க முடியும்.

-எம்.பி. சாஹிறா  பானு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives