நீரின் முக்கியத்துவம்: நீர் ஓர் உயிர் ஆதாரமாகும்.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஆனால் மிக அதிகளவில் மனிதச் செயற்பாடுகளாலேயே  அதன் தூய்மைத் தன்மை கெட்டு மனிதப் பயன்பாட்டிற்கு உதவாமலும்  உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும்  மாசடைந்து விடுகின்றது. அதாவது,

நீரின் முக்கியத்துவம்-water-pollutionவிவசாய நடவடிக்கைகள்

விவசாய நடவடிக்கைகளின் போது விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள், பீடை நாசினிகள், மற்றும் ரசாயண உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நிலத்தினூடாக நீரானது வெள்ளக் காலங்களில் பாய்ந்து செல்லும்போதோ அல்லது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கூடாக ஆறுகளில் இந்த நீர் கலக்கின்ற போதோ அத்தகைய மாசுக்களை கழுவிசேர்த்த வண்ணமே நகர்கின்றது. மேலும் இரசாயண கிருமிநாசினி, பீடை நாசினி என்பவற்றின் கொள்கலன்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் விடப்படுகின்றபோதும் நீர் மாசடைவதற்கு வழிவகுக்கின்றது.

கைத்தொழில் நடவடிக்கைகள்

இன்று உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும், அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கின்ற ஒரு துறையாகவும் கைத்தொழில்துறை காணப்படுகின்றது. கைத்தொழில்துறையில் பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகின்றது.

குறிப்பாக இரசாயணப் பொருட்கள் தயாரித்தல், இலத்திரணியல் கழிவுகள், உணவு பதனிடல் கழிவுகள், மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களைக் குளிரவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் விடப்படும் சூடானநீர் போன்றவற்றின் காரணமாக நீர்நிலைகள் மாசடைகின்றன.

நீரின் முக்கியத்துவம்-water-pollution-dirt-inside

நகராக்கம் 

நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில், இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் சேரும் கழிவுகளை நீர் நிலைகளில் வீசிவிடுகின்றனர்.

மேலும் நகரப்பகுதிகளில், இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. இவற்றை விட நகரப்பகுதிகளில் பெரும்பாலும் அருகருகில் அமைக்கப்பட்டிருக்கும் மலசலகூடக்கழிவுகளினாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது. குறிப்பாக தரைக்கீழ் நீர்வளம் கொண்ட கரையோர நகரப் பிரதேசங்களில், இந்நிலைமை காணப்படுகின்றது.

கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக்கற்பாறைகளை அகற்றுதல்

கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கண்டல்தாவரங்களும் முருகைக்கற்பாறைகளும் உவர்நீர் தரைக்கீழ் நீருடன் சேர்ந்துவிடாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை அகற்றுகின்றபோது அல்லது அழிக்கின்றபோது தரைக்கீழ் நீருடன் நேரடியாக உவர்நீர் கலந்து தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையை அதிகரிக்கின்றது.

நீரின் முக்கியத்துவம்-sea-pollutionஎண்ணெய்க்கசிவு 

ஏரிகளுக்கூடாக அல்லது கடலிலே பயணம் செய்கின்ற கப்பல்களிலிருந்து எண்ணெய்க்கசிவுகள் ஏற்படுகின்றபோதும் நீர் மாசடைகின்றது. அமெரிக்காவில் பேரேரி போன்ற ஏரிகள் போக்குவரத்திற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றினூடாகப் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து எண்ணெய் கசிகின்றபோது நீரின் தன்மையை மாற்றியமைக்கின்றது. கடலிலே பயணம் செய்யும் கப்பல்களினாலும் மற்றும் எண்ணெய் கிணறுகளின் கசிவினாலும்  கடற்கரை நீர் மாசடைகின்றது.

நீரின் முக்கியத்துவம்: நீர் ஓர் உயிர் ஆதாரமாகும். Continue reading to Page 3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives