உணவுப் பஞ்சத்தில் நாட்டை சிக்க வைத்துவிட்டு இன்று பாராளுமன்றில் உப்புச் சப்பற்ற வாதங்களையும், வாக்கெடுப்புகளையும் முன்னெடுக்கிறார்கள் எம்.பி.மார்கள்….
பிரச்சினை பாராளுமன்றில் பேசிப்பேசி எதுவும் தீர்வாகாதென்பது இன்று மக்கள் மத்தியில் தெளிவாக உணரப்பட்டுவிட்டது. எம்.பி.க்களோ அவர்களதும், அவர்களது குடும்பங்களினதும் Safety ஐயும் சொகுசு வாழ்க்கையையும் பற்றிதான் சிந்திக்கிறார்களே தவிர மக்கள் நலனை சிந்தித்து செயலாற்ற ஒரு சொட்டும், யாரும் முனைகிறார்கள் இல்லை.
காராணம் அனைவர் உள்ளத்திலும் அடுத்த தேர்தல்தான் இலக்குதான் இருக்கிறது. ‘அடுத்த தேர்தலுக்குள் நாட்டிலுள்ள மக்கள் நிலை எவ்வாறு அமையப் போகுதோ’ அது தெரியாத விதி!
கொழும்பில் ஓய்வில்லாமல் மக்கள் கொந்தளிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் வலுத்துக்கொண்டே இருக்கின்றது. இருப்பினும் முழு நாட்டினாலும் இதே மக்கள் கொந்தளிப்புகள் தான்.
நான் கூட சிந்தித்திருக்கிறேன்! எனது இளவயது இது, இந்த வாழ்நாளில் நான் பழகிய அரசியல்வாதிகள் பலர்… இருந்தபோதிலும் ‘எனது வாழ்நாளிலேயே அளவிட முடியாத அரசியல் தவறு ஒன்றாக இந்த கும்பலுக்கு வாக்களித்ததையிட்டு மனம்வருந்துகின்றேன்.’
கேவலமான நிலைக்கு இன்று நாட்டை அச்சாணிக்குள் போட்டு சுரையாடி குளிர்காய்கிறார்கள். அதற்கு இன்னும் இன்னும் சில அரசியல்வாதிகள் துனைநிற்கிறார்கள். இது மிகவும் கவலையான விடயம்.
அதற்காக மற்றவர்களை உத்தமரென்று பத்திரம் கொடுக்கவும் முடியாது. இன்றைய நிலைமையை சிந்தித்தால் அன்றைய பிணை முறி முதல் 20 வரை அத்தனைக்கும் வித்திட்டவர்கள் நாம் ஒவ்வொரும் தெரிவு செய்த அழுகிய அரசியல் தலைமைத்துவங்களே!
இவை ஒருபுறமிருக்க,
இன்று தலைநகரின் நிலை அடிப்படை பொருளாதார நிலைமையில் மிக மோசமடைந்து செல்கின்றது. கேஸ் இல்லை, பெற்றோல் இல்லை, பஸ் இல்லை, நடந்து செல்ல மக்களுக்கு தெம்பும் இல்லை! அந்தளவு நெருக்கடி ஒவ்வொருவர் குரல்வளையையும் நசுக்கிக் கொண்டிருக்கின்றது.
மாறாக இன்று பலர் நாட்டை விட்டு தப்பியோடுவது போன்று வெளிநாடுகளை நோக்கி தொழிலுக்காக பயணிக்கின்றனர். (உண்மையும் அதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை)
அரசன் இன்று மக்களிடம் அடிமைக்கைதியாகிய சூழலில் எப்படி நாடு அரண்மனை கட்டும்!.
இது இந்நாட்டுக்கு வந்த பேரவலம்! இதற்கு முன்னர் இலங்கையில் எத்தனையோ பல அழிவுகள், குழப்பங்கள் வந்தபோதிலும் மக்கள் இப்படியொரு கொடூரத்தை சந்தித்த வராலாறே இல்லை!!
இந் நிலையில் இற்றைக்கு சில மாதங்களுக்கு முன் பலரது வாயிலும் அன்றாட கூலித் தொழிலாளிகளின் கஷ்டங்கள் என்னவென்றே பரிதாபமான பேச்சாக இருந்தது. ஆனால், தற்போது நிலையில் இந்த நெருக்கடி நடுத்தர வர்க்கத்தை (தொழிலாளர் வர்க்கம்) மெல்லச் சூழ்ந்துள்ளது. இதன் அடுத்த இலக்கு முதலாளி வர்க்கத்தினைத்தான் சூழ்ந்து நசுக் போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இன்று பல அங்காடிகளுக்குச் சென்று பாரத்தால் தெரியும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுக்கள் வெற்றுத்தாட்டாகி கிடக்கின்றன. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல இதைவிட நிலைமை மோசமாகும் என நேற்று முன்தினம் பிரதமர் கூறிய கருத்தின் சிமிக்ஞையே இது!
இந் நிலையும் வந்து, வியாபார முதலாளிகள் அனைவரும் வீட்டிலிருக்கும் நிலைமை உருவாகினால் எவ்வளவு நாளைக்குத்தான் சேமித்த பணத்தை வைத்து வாழ்வது. ‘சுழலா மூலதனத்துக்குள் நாடு முழுமையாக நெசுங்குண்டு சூழ்ந்து சுருங்கி விடும்.’
இவைகளை சொட்டும் சிந்திக்காமல் இப்போதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கல் செய்யும் வியாபாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படி நிலைமை வலுத்துச் சென்றால் தனியார் நிறுவனங்களும் படிப்படியாக மூடும் நிலையை எட்டிவிடும்…
நான்கு பக்கமும் கடனால் சூழப்பட்ட இலங்கை நாடானது, மேலும் நான்கு பக்கமும் மேலாலும் மூடி, கீழாலும் மூடி வரவுமில்லாமல், செலவுமில்லாமல் (ஏற்றுமதி, இறக்குமதி) முடங்கிக் கொண்டிருந்தால் நிலைமை என்ன? பண வீக்கம் எகிறிக்கொண்டே செல்கிறது.
இங்குள்ள ஒவ்வொரும் குறைந்தது தங்களுக்கு தேவையானதை தாமகவே உற்பத்தி செய்தோ அல்லது தயாரித்தோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருத்தாலாவது ஓரளவு மனநிம்மதி பெறலாம். ஆனால், அதுவுமில்லை.
~ மொத்தத்தில் முழு நாடுமே சோம்பலுடன் பிறந்து அதே சோம்பலுடன் மரணிப்பவர்கள்!
~ திறமைக்கு முன்னுரிமை வழங்காத அரசாங்கம்!!
~ தகுதியானவர்களுக்கு தகுந்த பதவிகளை வழங்காத மக்கள்!
~ ஊழல்வாதிகளை அரசியல்வாதிகளாக்கி அவர்களுக்கு ‘சேர்’ போடுகின்ற சமூகம்!
~ புத்திகெட்ட சட்டங்களுக்கு கை உயர்த்தி, சுகபோகத்துக்காக நாட்டை விற்கிற அரசியல் கலாச்சாரம்!
இப்படி எத்தனையோ பல எழுதி விபரிக்க முடியாத வழுக்களுடன் வாழுகிறோம் நாம். அடுத்த சில மாதங்களில் நாடு எந்தளவு பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறி!
நல்லது நடக்க! நமது நாடு பொருளாதார ரீதியில் மீண்டு வர! நாம் அனைவரும் அவரவர் கடவுள்களை பிரார்த்திப்போம்!!!
சற்று நாம் அனைவரும் நமது ஒவ்வொரு சகோதரர்களின் நிலைமையையும் சிந்தித்து செயலாற்றுவோம்!
– நேற்று அன்றாட தொழிலாளி
– இன்று அடிப்படை தொழிலாளி
– நாளை முதலாளிமார்தான் இலக்கு (இதுதான் பொருளாதார நெருக்கடியின் கோட்பாடு இதில் எந்த சந்தேகமும் இல்லை)
– அடுத்தது நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
இப்படி முழு நாடும் நசுங்குவதற்கிடையில் நல்லது நினைத்து நம்மிலுள்ள நெருக்கடியானவர்களை இனங்கண்டு கைகொடுப்போம்! வெற்றி நிச்சயம். இதுவே இறைவனுக்கும் பிடித்த செயல்!!!

Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More