சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதன் அவசியம்.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நாம் வாழும் இந்த பூமியில் எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமாயின் சுற்றுப் புறச் சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமாக காணப்டுகின்றது.

குறிப்பாக சுற்றப் புறச் சூழல் என்பது உலகில் இயற்கையாக காணப்படும் எல்லா உயிர் பொருட்களையும், உயிரற்ற பொருட்களின்  தொகுப்பையும்  குறிப்பதாகும்.

“எம்மைச் சுற்றி உள்ள ஆறுகள், ஏரிகள், மண், நீர், வளிமண்டலம், நாற்றங்கள், சுவைகள், தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடங்கிய மனித வர்கத்தின் சுற்றாடல்களின் பௌதீகக் காரணியே சுற்றுப் புறச் சூழல்” என தேசிய சுற்றாடல் சட்டம் சுற்றுச் சுழலை வரைவிலக்கணம் செய்கின்றது.

இன்று உலகம் முழுவதும் சுற்றுப் புறச்சூழல் மாசுபட்டு மனித இனம் மட்டுமே பெருகி வருகிறது. இதனால் பிற யாவற்றையும் அழிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இத்தகைய ஒரு பேரழிவின் விளிம்பில் நாம் அனைவரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் நம்மை பாதுகாத்து சூழலை உறுதிப்படுத்தாவிட்டால் பெரும் சவாலை எதிர் நோக்க வேண்டி ஏற்படும்.

இதனடிப்படையில் இன்று சுற்றுப் புறச்சூழல் நிலை பெற்று இருக்க வேண்டுமாயின் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் சிறப்பாக காணப்பட வேண்டும். இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் போதுதான் வளம் வளர இயலுமே தவிர இவை ஒன்றில் பாதிப்பு ஏற்படும் போது சுற்றுப் புறச்சூழல் நாசத்தை நோக்கிய அழிவுப்பாதையிலே செல்லக்கூடும்.

இன்று சுற்றுப் புறச்சூழலை பாதுகாப்பது என்பது இவ் ஐந்தும் மாசுபடுதலில் இருந்து சூழலை பாதுகாப்பது என்பதின் தெளிவான பொருளாகும்.

அதாவது இன்று நிலம் மாசுபடுவதானது முழுமையாக மானிட செயற்பாட்டின் விளைவாகவே ஏற்படுகின்றது. தொழிற்சாலை கழிவுகளும், இரசாயன திரவியங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விசத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டு விடுகின்றது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களும், பொலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு தாவர வளர்ச்சியை குன்றச் செய்வதுடன் நுண்ணங்கி தொழிற்பாட்டையும் அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுப் புறச்சூழல் முழுமையாக  மாசடைகிறது.

அதேபோல் நீர்ச் சூழலை எடுத்து நோக்கின் மனிதனின் அத்தியவசிய தேவையை கிணறுகள், எரி, குளங்களும், குட்டைகளும், நிறைவு செய்யும் அதேவேளை தொழிற்சாலை மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர் நிலைகளில் சேர்வதனால் நீர்ச் சூழல் மாசடைவதுடன் தோல் நோய்கள்,குடல் சார் நோய்கள் ஏற்பட்டு மனிதனும் சுற்றுப் புறச்சூழலும் பதிப்புக்குள்ளாக நேரிடுகின்றது.

அவ்வாறே காற்றை எடுத்து நோக்கின் சுவாசிக்கும் காற்றில் மனிதனின் இரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்ச்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் ஓசோன் படலத்தையும் பாதிப்படைய செய்கிறது.

இது மட்டுமல்லாது மானிட செயற்பாட்டின் விளைவாக குளோரோபுளோரோ காபன் ,வாகனங்களின் புகைகள் என்பன வாளிமன்டலத்தை தாக்குவதில் காற்று பாதிப்படைந்து சூழலை மாசாக்குகின்றது.

அது மட்டுமல்லாமல் ஆகாயம் மாசுபடுவதை நோக்கினால் இன்று செய்மதி தொழில்நுட்பங்கள், விண் கமராக்கள் என பரந்துபட்ட சமிஞ்சை விளக்குகள் அவ்வப்போது விண்ணுக்கு ஏவப்படுகின்றது. இந்த விண்கலங்கள் கோள்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன.

இந்த விண்வெளிகுப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும் போது அவை நிலத்தை நோக்கி இரசாயன தாக்கங்களாக வந்தடைகின்றன.இதனால் ஆகாயம் வெகுவாக மாசடைகின்றது.

மேலும் நெருப்பு மாசுபடுதல் ஏற்படும் போது தட்ப வெப்ப சூழல் தாவரங்கள் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இறப்பதுடன் தாவர இறப்பின் மூலம் காபநீர்ரொட்சைட்டு வாயுவின் செறிவு குறைவடைந்து உயிரினங்கள் அருகவும் காரணமாக அமைகின்றது இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுதப்படுகின்றது.

இவ்வாறு பல வழிமுறைகள் மூலம் சுற்றுப் புறச்சூழல் பாதிக்கப்பட்டு மாசாக்கப்பட்டாலும் இச் சூழலை பேணி பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

அந்த வகையில் எமக்கு பல்வேறுபட்ட உரிமைகள் சட்டங்களினாலும் சமூகத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது.இவ் உரிமை எல்லாவற்றையும் அனுபவித்து உயிர் வாழ வேண்டும்.வெறுமனே உயிர் வாழ்ந்தால் மட்டும் போதாது சுகதேகியாக வாழ ஆரோக்கியமான சுற்றுப் புறச்சூழல் மிக அவசியமாகும்.

அந்த வகையில் எமது சூழலை பாதுகாப்பது என்பது ஒருவர் நினைத்தால் அது முடியாத காரியம். கோடிக்கனக்கான மக்கள் நினைத்தால் இதனை சாத்தியமாக்க முடியும்.எம் எதிர்கால சந்ததிகளும் நிலை பெற்று வாழ சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது அவசியமாகும்.

இதனடிப்படையில் சுற்றுப் புறச்சூழலை பாதுகாப்பதற்காக மக்கள், அரசாங்கங்கள், அரசு சாரா பொது நல அமைப்புகள் சுற்றுப் புறச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நடவடிக்ககளை எடுக்க தொடங்கியுள்ளன.பல்வேறு சுற்றுப் புறச்சூழல் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுப் புறச்சூழல் நடை முறைச் சட்டங்களையும்,சுற்றாடல் தினத்தையும் இன்று அறிமுகம் செய்து சுற்றுப் புறச் சூழலை பாதுகாக்க நடவெடிக்கை எடுக்கப்டுகின்றது. இதன்படிதான் ஜூன் 06 ல் உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இன்று சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு முறைகள் ,சுற்றுப் புறச்சூழல் கல்வி,சுற்றுப் புறச்சூழல் மேலாண்மை, சுற்றுப் புறச்சூழல் பொறியியல் போன்ற கல்வி முறைகள் வழங்கப்பட்டு சுற்றுப் புறச்சூழல் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகிறது.

அது மட்டுமல்லாது சுத்தப்படுத்துதல் பிரச்சாரம், சுற்றுப் புறச்சூழல் பிரச்சாரம்,காற்று மாசுபாடு தவிர்த்தல், தண்ணீர் மாசுபாடு தவிர்த்தல்,மரம் நடுதல் ஆகியவற்றின் மூலம் சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்க நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு அரசு சாரா அமைப்புக்கள் தினமும் குப்பைகளை அகற்றி தெருக்களையும் வீடுகளையும் தூய்மையாக பராமரிக்க தொடர்ந்து உதவி வருகின்றது. நமது ஊர்களில் சேர்ந்த குப்பை கூழங்களை, பொலித்தீன் பைகளை அகற்றிச் சென்று சிறப்பாக முகாமை செய்கின்றனர்.

சுத்தமான குடி நீரை அனைவரும் தடையின்றிப் பெறுவதற்கு ஏற்பாடு செய்கின்றது. சாலையோரங்களில் மரங்களை நட்டு சூழலை பாதுகாத்து வருகின்றது. சில சங்கங்கள் உணவுச் சுழற்சியை காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் நம்மை சுற்றியுள்ள அனைத்தும்தான் நம்மை வாழ வைக்கின்றன. ஆனால் உண்மையில் நமது சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா? அல்லது வளமுடன் மேம்பட போகிறதா? அல்லது அழிவடையும் சாத்தியக்கூறு இருக்கிறதா? என்பதை ஒவ்வொரும் எண்ணிப்பார்த்து செயற்பட வேண்டும்.

இன்று அனைவரும் வீட்டை அழகுபடுத்த விரும்புகிரார்கள் ஆனால் நாம் வாழும் சூழலை மட்டும் சுத்தமாக வைத்திருக்க ஏனோ அக்கறை செலுத்துவதில்லை.அதனால் அசுத்தத்திலே வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது. சுற்றுப் புறச்சூழலை பாதுகாப்பது ஒரு குழுவின் கையிலோ,நிறுவனத்தின் கையிலோ உண்டு என ஒதுங்கி விட முடியாது.இதில் எல்லோரின் பங்களிப்பும் அவசியமாகும். இன்று நம் எல்லோரது கைகளிலும் உள்ள கூட்டு பொறுப்பாக இது காணப்படுகின்றது.இன்று தின்ம ,திரவ வாயு ரீதியான அணைத்து கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.இதன் மூலம் சூழலில் ஏற்படும் பாதிப்பையும் உயிரின அழிவுகளையும் மொத்தால் எம்மால் கட்டுப்படுத்த முடியும்.எம் எதிர்கால சந்ததிக்கு ஏற்ற வகையில் மீள் பாவனையை அதிகரித்து சூழலை பாதுகாப்பது அவசியமாக அமைகின்றது.

தொகுத்து நோக்கும் போது கல்வியறிவு பெற்ற மனிதன் ஒரு தொழிற்சாலையை உருவாக்குகிறான் அனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்க
முற்படுவதில்லை ஒரு வேளை மனிதன் இந்த கல்வியை கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது இலகு.

மாறாக கற்ற கல்வியில் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிக்குதான் அது கேடாக அமைந்து விடும். நம் சந்ததிகளின் எதிர் கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது.எனவே நாம் அதை சிந்தித்து சூழலை பாதுகாப்பது அவசியமாகும்.

சுற்றுப் புறச்சூழல் மாசுபாடுகளை மனிதனே ஏற்படுத்துகின்றான். எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது. இதற்காக அவன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சுற்றுப் புறச் சூழலை பாதுகாக்க இயற்கையைப் பேணி காப்பதோடு கற்றல், கற்பித்தல் இந்த இரண்டு முறைகளிலும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டால்தான் முழுமை பெற முடியும்.

வருங்கால தலைமுறையினர் ஆற்றலோடும் ஆளுமையோடும் உயிரோடு உரிமையோடும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின் சுற்றுப் புறச்சூழலை பாதுகாப்பது அவசியமாகும்.

– (எம்.பி.சாஹிறா பானு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!