வனவளத்தை பாதுகாப்பதன் அவசியம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Forest
Forest

(கட்டுரை – எம். பி. சாஹிறா பானு)

உலகில் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயற்கையாக வனங்கள் தோன்றியுள்ளதாக  வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவை  லேட்டேவோனியன், ஆர்கியாபோடேரிஸ் எனும் தாவரங்களின் வேர் மற்றும் தண்டு என்பவற்றின் மூலம்  பெருக்கமடைந்து  வனங்களாக தோன்றியதாகவும்  குறிப்பிடப்படுகிறது. பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியானது  வனம் என  அழைக்கப்படுகின்றது. புவி மேற்பரப்பில்  9.4 % வனங்களாகும். உயிர்க்கோளத்தின் மொத்த உற்பத்தித் திறனில்  75 % ம் பூமியின் மொத்த உயிரினத் தொகுதியில் 8 % ம்  வனங்களாகவே காணப்படுகின்றன.

Corbon dioxide Oxygen Cycle
Corbon dioxide Oxygen Cycle

பொதுவாக தாவரங்கள் காபணீரொட்சைட்டு வாயுவை உள்ளெடுத்து ஒட்சிசன் வாயுவை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. இதனால் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒட்சிசன் வாயுவானது மிதமாக கிடைக்கின்றது. அது மட்டுமின்றி  சமுத்திரங்களுக்கு அடுத்ததாக மிகப்பெரிய காபன் களஞ்சியங்களாக வனங்களே  காணப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்த வகையில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் என்பது மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும் கலாச்சாரத்தோடும் தொடர்புபடுகின்றன. ஆனால்   இன்றைய  காலகட்டத்தில்  வனப் பகுதிகள்  மிகக் கூடுதலாக அழிக்கப்படுகின்றமை வருந்தத்தக்க விடயமாகும். ஒரு வனம் அழியும் போது வெறும்  மரங்கள் மட்டும் அழிவதில்லை. அங்கிருக்கும் அத்தனை  தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள்  என எண்ணற்ற நுண்ணுயிர்கள் அனைத்துமே  ஒட்டு மொத்தமாக  அழிந்து விடுகின்றன. இதனை  மையமாக வைத்தே வனங்களின்  பாதுகாப்பை பேணும் வகையில்  மார்ச் மாதம் 21 ம் திகதி சர்வதேச காடுகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலகில் காணப்படும் வனங்களில் மிகப்பெரியது அமேசன் ஆகும். அதிகம் மழைவீழ்ச்சி கிடைப்பதனால் இவை  மழைக்காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கு விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் சில பழங்குடி மக்களும் வாழ்கின்றார்கள். இதே போன்று இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வன்னம் உலக மரபுரிமை வன பூமிகளாக  சிங்ஹராஜவனம், நக்கல்ஸ் வனாந்தரமும் உயிரியல் முக்கியத்துவமிக்க வன ஒதுக்குப் பிரதேசங்களாக ஹுருலு சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப் பிரதேசம், கண்நெலிய-தெதியகல-நாக்கியா தெனிய  சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப் பிரதேசம், உடவத்த கலே வன ஒதுக்குப் பிரதேசம் என்பனவும் காணப்படுகின்றன. இவற்றுள் சிங்ஹராஜவனமே  இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய வனமாகும்.

Amazon Rain Forest
Amazon Rain Forest

மற்றும்  ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்,உலகக்  காப்புக் கண்காணிப்பு மையம் என்பன இணைந்து  அனைவரின் கருத்துக்களும் ஏற்ற வகையில் உலகில் உள்ள வனங்களை ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது  அவை,

 1. மித வெப்ப  ஊசியிலைக் காடுகள்
 2. மித வெப்ப அகலிலை  மற்றும்  கலப்பிலைக் காடுகள்.
 3. வெப்ப வலய ஈரக் காடுகள்
 4. வெப்ப வலய வரண்ட காடுகள்
 5. அடர்த்தியற்ற காடுகளும் மற்றும் புற்றரைக் காடுகளும்.
 6. வளர்ப்புக் காடுகள்

என்பனவாகும். ஆனால் இலங்கையில் மரங்களுக்கிடையில் காணப்படும்  மண்  மற்றும் கடல் மட்டத்தில் இருந்து  உயரம்  என்ற இரு   காரணிகளையும்  அடிப்படையாகக்  கொண்டு  வனங்கள்  எட்டு வகைப்படுத்தப்படுகின்றன அவையாவன,

 1. மலை நாட்டு வனங்கள்
 2. துணை மலை நாட்டு வனங்கள்
 3. கீழ் நாட்டு மழை வனங்கள்
 4. ஈர வலய பருவக்காற்று வனங்கள்
 5. உலர் வலய பருவக்காற்று வனங்கள்
 6. வடிநில உலர் வலய வனங்கள்
 7. திறந்த வனங்கள்
 8. கண்டல் காடுகள்
Sinharaja Rain Forest
Sinharaja Rain Forest

போன்றனவாகும். இவ்வாறு பரந்துபட்ட ரீதியில் காணப்படும் இயற்கை வனங்களின் மூலம்  நாம் பல்வேறு வகையில் பயனடைகின்றோம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதாவது வனங்கள்,

 • மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகின்றது.
 • சுற்றுப் புறச்சூழல் சமநிலையை பேணுகின்றது.
 • மண் அரிப்பைத் தடுத்து மண்வளத்தைப் பாதுகாத்து காற்று மண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
 • ஆரோக்கியமான காடுகள் புயல்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
 • கடற்கரை ஓரங்களில் காணப்படும் கண்டல் தாவரங்கள் சுனாமியால் ஏற்படும் சேதங்களை குறைக்கின்றது.
 • காட்டு மரங்களில் இருந்து இறப்பர், விளையாட்டுக் கருவிகள், தளபாடங்கள், வாசனைத்திரவியங்கள், அழகு சாதனப்பொருட்கள், மருந்துகள்  என்பன தயாரிக்கப்  பயன்படல்.
 •  விறகுக்காகவும், உணவுக்காகவும், விலங்குகளின் புகலிடமாகவும்  பயன்படுகின்றது.
 • மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஒட்சிசன் வாயுவை  வெளியிடுதல்

மேலும் மரங்கள் காற்று மட்டத்தில் இருந்து கரியமில வாயுவை  உறிஞ்சிக் கொள்வதன் மூலம் உணவுத் தயாரிப்பிற்கு உதவுகிறது. இதனால் சுற்றுப்புறக் காற்றின் வெப்பநிலையை வெகுவாக குறைத்தும் விடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!