தற்போதைய சட்டத்திற்கேற்ப  சபை நடவடிக்கைகள்

உள்ளூராட்சி அமைச்சு முடிவு

 

(ஆதில் அலி சப்ரி)

 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத்  தொடர்ந்து உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக் காலம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பரவிவரும் கட்டுக்கதைகள் மற்றும் தப்பபிப்பிராயங்களை தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சபைகளின் பதவிக் காலத்தை ஆரம்பித்தல் மற்றும் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பான சட்டத்தை கீழே காணலாம். 

2016 இலக்கம் 16 உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டமூலத்தின் பிரிவு 65 மற்றும் பிரிவு 66 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று சபைகளுக்கு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படுபவர்களின் பெயர்களை சரிவர குறிப்பிட்டு விளம்பரப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட வேண்டும்.

 

உறுப்பினர்களின் பதவிக்கால ஆரம்பம் 

 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சரால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பதவிக்காலம் 2018.03.06ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டமூலத்திற்கமைய தேர்தல் ஆணைக்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை விளம்பரப்படுத்திய பின்னர் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வெளியிடும் வர்த்தமானி அறிவித்தலினூடாக 2018.03.06ஆம் திகதி முதல் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆரம்பமாகின்றது.

 

சபைத் தலைவர் அல்லது நகர பிதா தெரிவு 

 இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று அல்லது சுயேட்சைக் குழுவொன்றின் மூலம் உள்ளூராட்சி மன்றத்துக்கான ஆசனங்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளபோது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், மேற்படி அரசியல் கட்சியின் செயலாளரிடம் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவரிடம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் இருந்து சபைத் தலைவர், உப தலைவர் அல்லது நகர பிதா, பிரதி நகர பிதா ஆகியோரை தெரிவுசெய்து தரும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

ஏதாவதொரு உள்ளூராட்சிமன்றத்தில் மொத்த ஆசன தொகையில் 50 வீதத்திற்கு அதிகபடியான ஆசனங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றால் அல்லது சுயேட்சைக் குழுவொன்றால் பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், குறித்த உள்ளூராட்சிமன்றத்தின் முதல் அமர்வில் நகர பிதா அல்லது பிரதி நகர பிதாவை உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். பிரதேசத்தின் உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் முதல் அமர்வுக்கு தலைமை தாங்கவேண்டும்.

 

சபைத் தலைவர், நகர பிதா தெரிவு முறை

 1. உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் நடைபெறும் முதல் அமர்வில் உறுப்பினர்கள் சபைத் தலைவரை வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்துகொள்ள உரிமை பெறுகின்றனர்.

2. வாக்கெடுப்பு முறை இரகசிய வாக்கெடுப்பா! வெளிப்படையான வாக்கெடுப்பா! என்பதை உறுப்பினர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

 

மொத்த உறுப்பினர் தொகை இல்லாவிட்டால்…

 மொத்த உறுப்பினர் தொகை தெரிவுசெய்யப்பட்டில்லாத சந்தர்ப்பமொன்றிலும், அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் சபையின் பதவிக் காலத்தை ஆரம்பிக்கவேண்டிய தினத்திலிருந்து சபையை ஸ்தாபிக்க முடியுமான வகையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தில் சட்டதிட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரால் விளம்பரப்படுத்தப்படுவதோடு சபையின் பதவிக் காலத்தை ஆரம்பிப்பதில் தடையேதும் இல்லை.

 

கட்சித் தாவலுக்கு இடமில்லை

 உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டமூலத்தின் 10 பிரிவின் பிரகாரம், ஏதாவதொரு கட்சியின் செயலாளரால் கட்சியில் தெரிவாகியுள்ள உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை முடிவடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவித்த பின்னர், மாவட்ட

தேர்தல் அதிகாரி அவ்விடயத்தில் உடன்படும் சந்தர்ப்பத்தில் உறுப்பினரின் பதவிக் காலம் முடிவடைந்ததாக அறிவிக்க முடியும். இதன்மூலம் உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டமூலத்தில் கட்சி தாவலை தடுப்பதற்கான சட்டமியற்றப்பட்டுள்ளது.

 

பெண் பிரதிநிதித்துவம்

 உள்ளூராட்சிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் 262ஆவது அதிகாரமாகிய உள்ளூராட்சிமன்ற சட்டமூலம் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பென்பதால், அதன் சட்டதிட்டங்களுக்கேற்ப உள்ளூராட்சிமன்றங்களுக்கு பெண் அபேட்சகர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

2018 உள்ளூராட்சிமன்ற 

தேர்தலுக்கேற்ப இறந்த காலத்திற்கு பொருந்தும் வகையில் சட்டமூலத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இம்முறை சபைக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்துகொள்வதில் ஏற்பட்டுள்ள

சிக்கல் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இதன் பின்னர் நடத்தப்படும் தேர்தல்களிலே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட முடியும். நடைபெற்று முடிந்த

தேர்தலொன்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென்ற தீர்மானத்திற்கு மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வந்துள்ளது.

இதன் விடயங்களை கருத்திற்கொண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்தல் தொடர்பாக இப்போதுள்ள சட்டதிட்டங்களை பின்பற்றுவது பொருத்தமானதென்றும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலைத் தொடர்ந்து பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்வாங்குவது குறித்து

சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சர்,

தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சித் தலைவர்களிடையே பாராளுமன்றத்தில் இவ்வாரம் கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது. கலந்துரையாடல்களின்படி, ஏற்கனவே உள்ள சட்ட திட்டங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கும்,

சிக்கல்கள் ஏற்படும்போது நீதிமன்ற தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!