சிங்கமும் கரடியும் ஒற்றுமை குலைய தந்திரம் வகுத்ததாம் நரி…!

( ஆக்கம்: அஷ்கி அஹமட் )

“ஒரு காட்டில் சிங்கமும் கரடியும் ஒன்றாக இணைந்து இறையை வேட்டையாடின. வேட்டையின் பின் பங்கிடுவதில் சிங்கத்திற்கும் கரடிக்கும் சண்டை. சண்டை போட்ட இருவரும் களைப்படைந்து கீழே விழுந்தனர் எழவே முடியாமல்.
இவர்களின் நிலையை அறிந்த குள்ள நரி ஓடி வந்து அந்த இறையை தூக்கிக் கொண்டு ஓடியது. விழுந்தவர்கள் விழுந்தே கிடந்தனர்.”

சிறு கதைதான் ஆனால் அர்த்தம் பெரிது.

உலகில் நாம் அன்றாடம் பலரோடு பலவிதமாக பேசுகின்றோம் பழகுகின்றோம். ஆனால் நமக்கு பிடித்தமானவர்கள் ஒருவர் அல்லது இருவர் அல்லது குறிப்பிட்ட தொகை.

சிறு வயது முதல் நமது வாழ்வில் வெற்றி அடையும் வரை பலர் ஒன்றாக எம்மோடு பயணிப்பர்.

ஆனால் யார் எந்த சர்ந்தர்ப்பத்தில் எம்மையே அழித்து அந்த வெற்றியை அடைய முயற்சி செய்வார்கள் தெரியுமா?

இது எமது அறியாமையா?
இது எமது உண்மை நட்பின் ஆழமா?
அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதா?

நமது உலக வாழ்க்கை மிகக் குறைந்த காலம் தான் அதற்குள் எவ்வளவு சந்தோசம், துக்கம், வெற்றி , தோல்வி, மேடு, பள்ளம் என்று சுற்றி சுற்றி வாழ்வோம். இந்த குறுகிய வாழ்வில் நமது வெற்றி இன்னும் ஒருவருக்கு செல்லும் என்றால் எம்மைப் போல் துரதிஷ்டசாலி வேற யாருமில்லை.

அப்போ நாம் என்ன செய்ய வேண்டும்.

யாரிடமும் நல்ல முறையில் பழகக் கூடாதா?
யாரிடமும் உண்மையாக இருக்கக் கூடாதா?
என்ற கேள்வி எல்லாம் உருவாகலாம்.

கண்டிப்பாக நன்றாக பழகலாம், பேசலாம் அது உங்கள் நற்பழக்கம். ஆனால் அவை தான் உங்கள் எதிரிக்கு சந்தர்ப்பம் என்றால் என்ன செய்வது.

உண்மையான நண்பர்கள் , உறவினர்கள், குடும்பம் இருக்கின்றது ஒற்றுமையோடு ஆகவே எவ்வாறு தோற்பது என்றும் நீங்கள் எண்ணலாம்.

இந்த உலகில் தாய், தந்தையால் மாத்திரமே உங்களுக்கு தோல்வி கிடையாது. மாற்றமாக ஏனையோரால் எந்த விதத்தில் உங்களுடைய வாழ்வில் தாழ்வு வரும் என்று சொல்ல முடியாது.

அந்த கரடியும் , சிங்கமும் ஒற்றுமையாகத்தான் சண்டையிட்டு வீழ்த்தமுடியாத ஒரு இரையை வீழ்த்தியது. ஆனால் தந்திரம் கொண்ட நரி இடைநடுவே வெற்றி அடைந்தது. இந்த சண்டைக்கும் நரிக்கும் எந்த சிறு தொடர்போ இல்லை. ஆனால் அது தந்திரமாக பார்த்தது அவர்களில் ” ஒற்றுமை இன்மையை” மாத்திரமே.

அந்த சிங்கம், கரடி போலவே எம் வாழ்வில் பலர் முதல் பாதியில் ஒற்றுமையாக பலர் இருப்பர். நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என்று. ஆனால் எம்மோடு அவர்கள் சந்தர்ப்பவாதியாக நடந்து கொண்டால் சண்டை ஏற்படும் ஒற்றுமை குழையும். அந்த நேரத்தில் எம்மோடு சேர்ந்து பயணிக்கும் ஒரு குள்ள நரியும் இருக்கும். ஒரு அரிய சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவுடன் ஓடிச் சென்றுவிடுவார்கள்.

எனவே வாழ்வில் உறவுகள் முக்கியம் தான் இல்லையென்ற மாற்றுக் கருத்து எனக்கில்லை. ஆனால் ஒற்றுமையே எமது பலம் என்கின்ற போது அது வாழ்வில் சறுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நல்லதோ கெட்டதோ அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தனையும் வேண்டும். அந்த நரி போல் எவரும் எமது உறவிலோ சரி வாழ்விலோ இருக்கின்றார்களா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டும்.

சிந்தித்து செயற்படுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!