2020 பொதுத் தேர்தல்

S. Ashraff khan

குறிப்பு – கொந்தராத்து காறர்கள் உழைப்பதற்கு இன்னும் விடுவதா? இல்லை தகுதியானவர்களை பா|மன்றுக்கு அனுப்புவதா? அம்பாறை மாவட்ட மக்களே இது உங்கள் கைகளில் – (தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்)

இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள போதிலும், சில வேட்பாளர்களே எதிர்வரும் சவாலுக்குரிய பாராளுமன்றத்திற்கு தகுதியானவர்கள்.

நாம் அவர்களைத் தெரிவு செய்கின்ற போது, கட்சி பாகுபாடு, ஊர்வாதம் மற்றும் பிரதேசவாதம், ஏனைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்

1, எமது அரசியல் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்க முனையும் போது அரசுக்கு சோரம் போகாமல் தட்டிக் கேட்பது மட்டுமல்லாமல், தகுந்த சட்டங்களையும் நிருபித்து தடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

2, சமுகத்திற்கான ஒரு பிரச்சினை வருகின்ற போது அது அரசாங்கத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி, பேரினவாத சதிகாரர்களின் அடக்கு முறையாக இருந்தாலும் சரியே உரிய நேரத்தில் உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை ஏற்பாடு செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

3, யாருடனும் எந்த நேரத்திலும் பயமின்றிப் பேசக் கூடிய தைரியமும் மொழியாற்றலும் சட்டத்தைக் கொண்டு சாதிக்கும் சட்ட முதுமானியாகவும் இருக்க வேண்டும்.

4, இலஞ்சம், ஊழல்கழுக்கு சோரம் போய் சமுகத்தை அடகு வைக்காதவராக இருக்க வேண்டும்.

5, தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவராக இருப்பதோடு, அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எப்போதும் பாதுகாவலனாக இருப்பவராக இருக்க வேண்டும்.

6, மொத்தத்தில் அரசியல் அனுபவமும் ஆளுமையும் உள்ள கறை படியாத கண்ணியவானாக இருக்க வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே எதிரிகளுக்கும் மனச்சாட்சி இருந்தால் அது சொல்லும் இத்தனையும் அதற்கு மேலும் தகுதிகளைக் கொண்டவர் YLS. Hameed தான் என்று.

சிறு சிறு குறைகள் குற்றங்களைக் காரணம் காட்டியோ அல்லது தான் நிற்கும் கட்சிக்காகவும், ஆதரவாளருக்காகவும் அவர்கள் கொடுக்கும் சிறு தொகைக்காகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவரைத் தவறவிட்டால், உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும்.
சரியாகவும் நியாயமாவும் சிந்திக்கா விட்டால் தோற்பது சமுகமே தவிர Yls Hameed அல்ல. அடிமைச் சாசனம் எழுது முன் மடமைச் சிந்தனையை மாற்றி மனித நேயத்தை சமுகத்தில் பரப்புங்கள். பலமிக்க பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!