மங்காத சேவகன் மன்சூர்! மடத்தன மடிவுகளால் தோற்கடித்து விடாதீர்கள்!!

எதுவும் சில காலம்; அதை அழியாத பொக்கிஷமாக்குவதும், அதை அழித்து அச்சாறாக்குவதும் அவரவர் விதைச்சலின் விளைவுகளே!

மன்சூர் எம்.பி. யின் நெருங்கிய சகா ஒருவருடன் நேற்று உரையாடக் கிடைத்தது.

அந்த உரையாடலின் வினைத்திறன் எத்தகையதென்றால் மன்சூர் என்பவர் ஒரு அலைவரிசை என்பது புலனாகியது.

1989 ஆம் ஆண்டு, அதற்கு முற்பட்ட காலம் தொட்டு கட்சியை காத்த வரலாற்று ஏட்டில் மன்சூர் தடம் பிடிக்கிறார். இதற்கு பல ஆதாரங்கள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் உள்ளன.

மறைந்த தலைவர் அஷ்ரபின் அரசியல் சாசனத்தில் ஓர் அடிச் சுவடாக மன்சூரின் அரசியல் முனைப்புகள் திடமானது என்றுதான் கூற வேண்டும்.

பயங்கரவாத காலத்திலும் பதறியடித்து சமூகத் துடிப்பில் மிகைத்து நின்றவர்.

அது மாத்திரமல்லாது படிமுறையாக அரசியலில் வளர்ச்சி கண்டவர்.

இப்படியிருக்கும் பல விடயங்களை நோக்குகளை மு.பா.உ. மன்சூர் பற்றி கூற பக்கங்கள் போதாது.

யார் எது கூறினாலும் அவர் சமூகத் துடிப்புள்ளவர். அதை யாரும் மறுக்க முடியாது.

மேலும், பாராளுமன்றில் பல சந்தர்ப்பங்களிலும் படபடவென கர்சித்த குரலென்றால் அது மன்சூர் தான்.
இப்படி பல இருந்தும் நடைமுறை அரசியலில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் நமது பிரதேசத்தில் அவருக்கான எதிர்ப்புகள் வலுக்கின்றன.

அப்படி வலுக்கும் எதிர்ப்பலயைின் வடிவங்கள் திடமான நிராயுதமற்றது.

அற்ப, சொற்ப விடயங்களுக்காக மன்சூர் எனும் அசுற சிகரத்தை சரித்து விடவும் கூடாது.

இது விடயங்களை வைத்து நோக்குகையில் இம்முறை தேர்தலில் எமது பிரதேச இவர் பற்றி சிந்திக்க வேண்டியதும் மிகையானது.

One thought on “மங்காத சேவகன் மன்சூர்! மடத்தன மடிவுகளால் தோற்கடித்து விடாதீர்கள்!!

  • March 24, 2020 at 8:22 pm
    Permalink

    Most suitable person he knows sammanthurai from UKG to UNIVERSITY level in politics.

    Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!