(கட்டுரை – செ. தர்ஷிகா)
மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை ஆகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன. 1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையில் 13-15 வயதுக்கு உட்பட்ட அதிகமான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக ரவீந்திர பெர்ணான்டோ கூறுகிறார்.
இலங்கையில் போதைவஸ்து நுகர்வின் நிலை 2016
2015 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருட்கள் சம்பந்தமான குற்றச்செயல்களுக்காக கைது செயப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,482ஆவதோடு இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீத அதிகரிப்பாகும். இவர்களில் 32 சதவீதம் ஹெரோயினை வைத்திருந்ததற்காகவும் 63 சதவீதம் கஞ்சா தொடர்பான குற்றச்செயல்களுக்காகவும் கைது செயப்பட்டனர். மேலும் பெரும்பான்மைக்குற்றச்செயல்கள் மேல் மாகாணத்தில் 60 சதவீதம் பதிவாகியது. அதைத்தொடர்ந்து தென் மாகாணத்தில் 10 சதவீதம், மத்திய மாகாணத்தில் 8 சதவீதம் என்ற வீதங்களில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43 சதவீதம், கம்பஹா மாவட்டத்தில் 14 சதவீதம், கம்பஹா மாவட்டத்தில் 14 சதவீதம், மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 4 சதவீதம், என்ற வீதங்களில் காணப்பட்டன. 2015ஆம் ஆண்டில் போதை வஸ்த்துக்கள் தொடர்பான குற்றச்செயல்களுக்கு கைதானவர்களின் வீதம் மொத்த சனத் தொகையில் ஒப்பிடுகையில் ஓர் இலட்சம் பேருக்கு 397 என்ற அளவில் காணப்பட்டது.தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது, ஹெரோயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் இன்னும் பல வகைகள் அடங்கும்.
போதையால் நடத்தையில் மாற்றங்கள்
இதுபோன்ற போதை வஸ்துக்களை நுகரும் பழக்கம் தற்போது இலங்கையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மருத்துவத்தேவைகளுக்காக ஹெரோயினை பெற முடியாத தட்டுப்பாடு நிலைகள் ஏற்படும் போதும் போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை உட்கொள்வதுண்டு. மருத்துவரின் மருந்து சீட்டின்றி இவற்றை விற்பனை செவது
சட்டவிரோதமான செயலாக இருப்பினும் இவற்றை பெறுவது சிரமமான விடயமாக இல்லை. இவற்றை நுகர்ந்த பல சம்பவங்கள் 2015 ஆண்டு பதிவாகியதால் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வழிநடத்தலுடன் சுகாதார அமைச்சு இது போன்ற மருந்து வகைகளை விற்பனை செவதை கட்டுப்படுத்தியும் கண்காணித்தும் வருகின்றது.
பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகிக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத் தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும்
சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர்.
இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே
சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
எல்லோருக்கும் எளிமையாகவும், பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப்பொருள்தான் சாராயம் மற்றும் அதைச் சார்ந்த மது வகைகள். இந்தப் பழக்கத்தை தற்போது பள்ளிப் பருவத்திலேயே பழகிக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் அரசே ஆங்காங்கே அமைத்திருக்கும் மதுக்கடைகளும், இதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், திரைப்படங்கள் இத்தகைய பழக்கம்- இளைஞர்கள் செவது தவறில்லை என்று சித்தரிப்பதும், மகிழ்ச்சி மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளதுமாகும்.
மது பரிமாறல்கள் மேலை நாட்டுக் கலாசாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்சனைகள் மற்றும் குறைகளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக் கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்திவிடுகின்றது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவரைத் திருத்த முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாங்களும் கற்றுக் கொள்கின்ற பலரும் இருக்கிறார்கள்.
இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை போதைக்கு அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செகின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல்சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
உலக நாடுகள் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரி வாசல்களிலேயே கஞ்சா சோக்லேட்கள் விற்கப்படுவதையும், விற்பவர்கள் கைது செயப்படுவதையும் பத்திரிக்கைகளில் படிக்க நேரிடுகின்றது. சுற்றுலாத்தலங்கள் அருகாமையில் சிதறிக்கிடக்கும் மதுபோத்தல்களும், ஊசிகளும் பலரும் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதற்குச் சான்று பகர்கின்றது. ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனதாகும்.
பாடசாலை மாணவர்கள் தலைநகரில் போதைப்பொருட்கள் பாவிப்பது இன்று வேகமாகப் பரவிவருகின்றது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி உரிய கவனம் எடுக்காதபட்சத்தில் இனிவருங்காலம் அதாள பாதாளத்திற்குள் சென்றுவிடும். போதைப்பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சிலரிடம் கருத்துக்கேட்ட போது போதை பொருளை பாவிப்பவர்களினால் எங்களுடைய பிள்ளைகளும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகுபவர்களாக மாற வாப்பு இருக்கின்றது எனக்கூறுகின்றனர். போதைக்கு எதிராக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.
போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம். Continue Reading Page 2
Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More
One Response
இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் படித்துள்ளேன்.