இந்த அமைச்சரிடம் அரசே  கடன் வாங்க நேரிடுமாம் 

[Political Gossip]
கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார்.

இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார்.

அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும்-அதிக பணம் சுற்றித் திரியும் அந்த அமைச்சின்மீதுதான்.

அந்த அமைச்சை வைத்திருந்தவரோ ஊழலில் நம்பர் வன் என்று பெயரெடுத்தவர்.இந்த அரசு ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டுக்களை சுமப்பதற்கு அதிக பங்கு வகித்தவர்.

அரச திறைசேரி காலி ஆகி இருக்கும் இந்த நிலையில்,அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி மூலமான வருமானத்தை தனது சகாக்களின் வர்த்தக மேம்பாட்டுக்காக வீட்டுக் கொடுத்து ஊழல் புரிந்தார் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர்மீது உண்டு.

மஹிந்த அணியினர் அவரை கழுகுபோல் அவதானிக்கத் தொடங்கினர்.மைத்திரி அணியில் உள்ள நெருக்கமானவர்களிடம் இவரின் ஆட்டத்தை அம்பலப்படுத்தினர்.மைத்திரியின் ஆட்கள் ஆதாரத்துடன் ஜனாதிபதியிடம் போட்டுக் கொடுத்தனர்.

இவரைத் தொடர்ந்தும் அந்தப் பதவியில் வைத்திருந்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அரசு அவரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம் என்பதை உணர்ந்த ஜனாதிபதி பிரதமரை அழைத்து விடயத்தை விளக்கினார்.

அந்த அமைச்சர் பிரதமரின் விசுவாசி என்றாலும்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சருக்கு உதவுவது தனது ஆட்சிக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று பிரதமர் கருதினார்.

மத்திய வங்கி விவகாரத்தால் ஏற்கனவே பிரதமரின் பெயர் நாரிப் போயுள்ளதால் மீண்டும் தனது பெயர் கெட்டுப் போவதையோ பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையோ பிரதமர் விரும்பவில்லை.இதனால் இந்த விடயத்தில் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு பிரதமர் வழிவிட்டார்.

உடனே அவரது அமைச்சு இன்னொருவரிடம் கொடுக்கப்பட்டு அந்த இன்னொருவரின் அமைச்சு இந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டது.இதனால் அமைச்சர் கடும் அதிருப்தியுடனும் தன்னை ஜனாதிபதியிடம் போட்டுக் கொடுத்தவர்கள்மீது கடுப்போடும் இருக்கின்றாராம்.

அரசுக்ககே கடன் கொடுக்கும் வாய்ப்பு நழுவிட்டதே என்ற கவலையாக இருக்கும்போல.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!