மறதி நோயினால் பாதிக்கப்படும் சமுதாயம் எது…?

கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான  செயல்பாடுகளில், எந்த  செயல்பாடுகளுக்கு நமது அரசியல் வாதிகள் தீர்வை பெற்றுத்தந்துள்ளார்கள் என்றாவது யாராலும் கூறுமுடியுமா..?
# தெகிவலை பாத்தியா பள்ளிவாசல் விடயம்..
# கிராண்பாஸ் பள்ளி விடயம்… # கண்டி மினாரா விடயம்… # மகியங்கனை பள்ளி விடயம்.. # தம்புள்ள பள்ளி விடயம்… # கறுமலையூற்று பள்ளி விடயம்.. # பொத்துவில் காணி விடயம்… # நுரைச்சோலை வீட்டுத்திட்டம்… # ஒலுவில் கடலரிப்பு விடயம்… # மாணிக்கமடு சிலை வைப்பு விடயம்.. # மரிச்சிக்கட்டி  விடயம்.. # இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட கடைகள் சம்பந்தமான விடயம்.. # வேருவலை மக்களுக்குக்கான நிவாரணவிடயம்.. # ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ள காணி விடயம்.. # ஞானசார முஸ்லிம்களை இம்சிக்கும் விடயம்.. # யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயம்… # தோப்பூர் மக்களின் காணி விடயம்… # கல்முனையிலிருந்து அம்பாரைக்கு செல்லும் நிறுவனங்களின் விடயம்…

இன்னும் பல சிறிய பெறிய விடயங்களும் உண்டு…
இந்த விடயங்கள் அனைத்தும் காலத்துக்கு காலம் மக்களாலும், அரசியல் வாதிகளாலும் பேசப்பட்ட விடயங்கள்தான்.
இன்று இந்த விடயங்களைப்பற்றி யாராவது பேசுகின்றார்களா..?
இந்த விடயங்களுக்கு நமது அரசியல் வாதிகள் தீர்வை பெற்றுத்தந்தார்களா..?
என்று எந்த முஸ்லிமும் இதுவரை கேட்டதாக யாபகமில்லை.
அரசாங்கம் இந்த விடயங்களை அறிந்துதான் இவர்களுடைய கூப்பாடுகளுக்கு செவிசாய்ப்பதில்லை என்ற விடயத்தையாவது புரிந்து கொண்டீர்களா.?
(இயன்ற மட்டும் கத்திவிட்டு நமது முஸ்லிம்கள் ஓய்ந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெறிந்த விடயம்தான்.)
ஆக,..மக்களின் மறைதி என்ற மூலதனத்தை வைத்து அரசியல் வாதிகள் காய் நகர்த்தி வருகின்றார்களே தவிர, இதற்கெல்லாம் தீர்வை இதுவரை அவர்களினால் பெற்றுத்தர முடியவில்லை.
அதனை மக்களும் அலட்டிக் கொள்ள தயாருமில்லை….!
முஸ்லிம் மக்கள் உணர்ச்சிகளை காட்டுவதிலும் அதி தீவிரம்தான், பிரச்சினைகளை மறப்பதிலும் அதி தீவிரம்தான் (சோடாப் போத்தல் கேஸ் மாதிரி) என்றும் வைத்துக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள் அதி உச்ச உணர்ச்சியில் இருக்கும் போது தேர்தல் என்று யாராவது மாட்டினால் அவருடைய பாடு அதோ கதிதான் (மஹிந்த மாதிரி), அதற்காகத்தான் அந்த நேரம்பார்த்து மக்கள் மத்தியில் நமது அரசியல்வாதிகள் வருவதில்லை,
உணர்ச்சிகள் எல்லாம் அடங்கியதன் பின் எதிரியை கூட நல்லவர் என்பார்கள் நமது மக்கள் (பிரபாகரனின் அட்டூழியங்களை மறந்தது போல்).
இதனால்தான் முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பதில் மற்றவர்கள் இன்பம் காண்கின்றார்கள்.
அதே நேரம் நமது அரசில் வாதிகளும், முஸ்லிம்களின் இந்த இயலாமையை பயன்படுத்தி நன்றாகவே விளையாடுகின்றார்கள்.
ஆகவே,… நமது முஸ்லிம் சமூகமும் இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்களேயானால், நஸ்டம் சமூகத்துக்கே தவிர அரசியல்வாதிகளுக்கு அல்ல.
*  மறதி நோய் இருக்கும் வரைக்கும் நமது அரசியல்வாதிகள் காட்டில் மழைதான்..!
* இனவாதிகள் காட்டிலும் மழைதான்…!
புரிந்தால் சரிதான்..?
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!