அதாவுல்லாவின் முயற்சியே கைகூடுகிறது

கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் வரலாற்றுத்தேவைக்கான ஒன்று கூடலில் கிழக்கு மக்கள் அவையம் தோற்றம் பெற்றது. இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருங்கிணைக்கும் பணியையே தலைவர் துவங்கி வைத்தார். பின்னர் அதன் பணிகளை சட்டத்தரணிகளான மர்சூம் மெளலானாவும், பஹீஜ் அவர்களும் திறம்பட நடத்திச் செல்கின்றனர்.

கிழக்கு முஸ்லிம் அவையத்தின் செயற்பாடுகளின் திருப்தியே ,கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறக்காமத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒன்று கூடலும் எதிர்கால ஒன்றிணைவுக்கான சமிக்ஞையும் ஆகும். ஒரே மேடையில் அனைவரினது இணைவுமானது தலைவர் அதாவுல்லாவின் இதய சுத்தியுடனான செயற்பாட்டுக்குக் கிடைத்த மகோன்னதம்  என்றால் மிகையாகாது.
இன்றைய நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கான வன்முறைகள் நாளந்தம் அதிகரித்துச் செல்வதும், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுவதும், சொத்துக்கள் தீக்கிரயாக்கப்படுவதும் எதிர்காலத்தில் இன்னுமொரு மியன்மாரை உருவாக்கிவிடுமோ என அச்சம் கொள்ள வைக்கின்றது. இந்த சூழ்னிலையில் முஸ்லிம் தலைமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடப்பதனால் சிக்கலே ஒழிய நன்மையில்லை.
ஆகவேதான் முஸ்லிம்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதன் முதற்கட்டமாகவே கிழக்கை ஒருங்கிணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது வியாபித்து வடக்கு , மற்றும் வடகிழக்குக்கு வெளியிலும் செயற்பாட்டினை செவ்வணே செய்வதே தலைவர் அதாவுல்லாவின் விருப்பமும் ஆகும்.
இப்பணியினை சிறப்புற முன்னெடுக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஓரணியில் திரட்டி அரசுக்கே அழுத்தம் கொடுக்க முடியும். ஆனால் துரதிஸ்டம் ஹக்கீம் தலைமை அணியினர் அவையத்திற்கு இதுவரை உளரீதியாகக் கூட ஒப்புதல் அளித்ததாகக் கூட தெரியவில்லை. எந்த சமிக்ஞையும் ஹக்கீம் தரப்பில் இருந்தோ அல்லது கிழக்கில் உள்ள ஹக்கீம் காங்கிரஸ் ஆதரவாளர்களாலோ இன்றுவரை காட்டப்படவில்லை.
ஆனாலும் இறக்காமத்தில் கிழக்கு  முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒன்றிணைவானது எதிர்காலத்துக்கான அடித்தளத்தினை இட்டுள்ளதோடு சிலருக்கு எச்சரிக்கை வேட்டுக்களாகவும் அமைந்துள்ளது என்பதே உண்மை. அதாவுல்லாவின் முயற்சியும் எதிர்கால இலங்கையை நோக்கிய சிந்தனையும் கைகூடுகிறது.
(Shifaan Bm, மருதமுனை)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!