இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வாணிவிழா நிகழ்வுகள்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வாணிவிழா நிகழ்வுகள்!

 

ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் முதல்வியாம் சரஸ்வதி தேவியின் பூஜையின் மூன்றாவது நாள் பூஜைகள் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் பிராந்திய நிலையம் மட்டக்களப்பில் இன்று(4) பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் சிறப்பாக நடைபெற்றது.

 

இதன் போது பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் அதன் முதலாவது அம்சமாக மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம்,சமுத்திர பல்கலைக்கழகம் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சுபராஜன் அவர்களின் தலைமையுரை, பல்கலைக்கழக மாணவர்களின் கலை,கலாச்சார அம்சங்கள் என்பன இடம்பெற்றன.

 

இதன் போது போது சமுத்திர பல்கலைக்கழகம் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சுபராஜன் மற்றும் இணைப்பாளர் அருள்சிவம் மற்றும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சார், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives