சம்மாந்துறையில் இளைஞர் மன்றம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறையில் இளைஞர் மன்றம்!

 

அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தி மற்றும் சமூகமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்,எம் ஹனீபா தலைமையில் இன்று (20)செவ்வாய் இடம்பெற்றது.

 

மேலும் இக் கலந்துரையாடலில் கெப்சோ(GAFSO) திட்டப்பணிப்பாளர், ஏ.ஜே.காமில் இம்டாட், அலுவலகர்கள் மற்றும் ஏனைய இளைஞர்துறைசார் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

எதிர்காலத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவுடன் இளைஞர்களையும் இனணத்து திறன் விருத்தி,சமூகசேவை சார்ந்த விடயங்களில் பங்களிப்பை சம்மாந்துறை பிரதேசத்தில் வழங்கி இளைஞர்சார் செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives