மட்டக்களப்பு தில்லை மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மட்டக்களப்பு தில்லை மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு தில்லை மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் சென்ற 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத்
திருவிழாக்கள் இடம்பெற்று
21ம் நாளான இன்று 10.09.2022 திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ்ந்து அரோகரா என்ற கோசத்துடன் மிக சிறப்பாக நடைபெற்றததோடு தீர்த்தமாடிய பின்னர் கன்னியர்கள் ஆலார்த்தி எடுத்து மூச்சடைத்து மயங்கிவிழும் அற்புதமான அமானுஷ்யமான அதிசய நிகழ்வும் நடைபெற்றது.

மண்டூர் கந்தசுவாமி ஆலயமானது
மட்டக்களப்பின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக விளங்கினாலும் ஆகம நெறிசாரா
பூசைகள் நிகழும் ஆலயங்களில் கதிர்காமத்தை ஒத்திருப்பதால் சின்னக்கதிர்காமம் என்று சிறப்பித்துக் கூறப்படும் புண்ணிய தலமாகவும்

மேலைத்தேய அந்நியர் ஆட்சிக்காலத்தில் இவ்வாலயத்தை அவர்கள் அழிப்பதற்காக முற்பட்ட போது முருகப்பெருமான் குளவிப்படை கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தியதாக வரலாற்று ரீதியான கதையொன்றும் உள்ளது.

இவ்வாறு வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் மண்டூர் முருகப் பெருமானது உற்சவகால நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டமை என்பது
குறிப்பிடத்தக்கது.
(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives