“அஷ்ரப் எனும் பன்முக ஆளுமை” -பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டி நிகழ்ச்சிகள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மனித நேய நற்பணிப் பேரவை, சம்மாந்துறை – ஸ்ரீலங்கா மற்றும் இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,

முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைமையாகத் திகழ்ந்த…

சட்டமுதுமாணி. மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 20 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் போட்டி நிகழ்ச்சிகள் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் அம்பாறை மாவட்ட ரீதியில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

“அஷ்ரப் எனும் பன்முக ஆளுமை”

எனும் தலைப்பில் இப் போட்டிகளுக்கான ஆக்கங்கள் இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளை தழுவியதாக இருத்தல் வேண்டும்.

பங்குபற்ற விரும்புவோர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பங்குபற்றும் போட்டி ஆகிய விபரங்களை

பொதுச் செயலாளர், மனித நேய நற்பணி பேரவை, இல. 452A, பஸார் 2ம் வீதி, சம்மாந்துறை – 05.
எனும் முகவரிக்கு சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுத்தித் திகதி : 04.09.2020

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே:
📌 முதலாம் இடத்திற்கு ரூபா. 10,000.00
📌 இரண்டாமிடத்திற்கு ரூபா. 7500.00
📌 மூன்றாமிடத்திற்கு ரூபா. 5000.00

பெறுமதியான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படும்.

போட்டி நிகழ்ச்சிகள் 13.09.2020 ஞாயிற்றுக் கிழமை இடம்பெறும்.

நிபந்தனைகள்:

மேற்படி போட்டி நிகழ்ச்சிகளில் ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபற்ற முடியும்.
👉 20 வயதுக்கு மேற்பட்ட யாவரும் பங்குபற்றும் திறந்த போட்டி.
👉 அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரமே போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
👉 பேரைவை உறுப்பினர்களின் குடும்பத்தினர் பங்குபற்ற முடியாது.
👉 நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

📞 மேலதிக விபரங்களுக்கு: 077 2309234, 077 069 65 59

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!