பாடசாலை ஊடக கழக பிரதிநிதிகளுக்கு முஸ்லிம் மீடியா போர ஏற்பாட்டில் செயலமர்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் ஊடக கழக பிரதிநிதிகள் மற்றும் ஊடகப் பொறுப்பாசிரியர் ஆகியோருக்காக ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு- -12,  இலக்கம் 65, புனித செபஸ்டியன் வீதியிலுள்ள  அல் – ஹிக்மா கல்லூரி கேட்போர் கூடத்தில் காலை 8.30 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறும் வழிகாட்டல் செயலமர்வில் பாடசாலையில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்துவது ? அல்லது அறிக்கையிடுவது ? என்ற தொனிப்பொருளில் இலங்கையின் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் துறைசார் அனுபவமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர்களினால் நடாத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை தமது பிரதிநிதிகளை அறிவிக்காத பாடசாலைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர செயலாளர் சாதிக் சிஹான் (077 – 311 25 61) அல்லது இந்த செயலமர்வின் இணைப்பாளரான ஷாமிலா ஷெரீப் (77 – 199 00 86) தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

செயலமர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதோடு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், ஐ.எம்.எஸ். நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!