நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வஸந்த் ரவி என ஓட்டுமொத்த நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால், நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More