படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ள நடிகர் சூர்யா!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் எதிர்பார்க்கப்படும் சூர்யா – 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இருப்பதாக தகவல்கள் இலங்கையிலும் இடம்பெற வெளியாகியிருக்கின்றன.

நியூஸ் – 18 என்ற இந்திய செய்தித்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கோவா – சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புக்களுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மத்தியிலேயே,

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில்

இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா – 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.

ஐரோப்பாவின் பல்கேரியா – செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா – வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.

பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.

இரண்டு பாகங்களாக 10மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 

இதேவேளை, சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தின் சில படப்பிடிப்புகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives