ஜெய் பீம் கதையின் நிஜ நாயகி சூர்யா மீது பல குற்றசாட்டுகளை தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த படத்தில் வரும் செங்கேனி கேரக்டரின் நிஜப்பெயர் பார்வதி.
அவர் இன்னுமும் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக முதல் முறையாக பேட்டி கொடுத்ததில் பகீர் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.
பார்வதி பேட்டி இது தொடர்பாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது, எங்களின் கதையை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் உதவ முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருளர் இனம் கிடையாது எனவும் நிஜ செங்கேனியான பார்வதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ஜெய்பீம் திரைப்பட குழு பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் சூழலில் நிஜ செங்கேனியின் பகீர் வாக்குமூலம் அவர்களுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More