பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம்

தமிழ் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீ தேவி தனது 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் காலடிபதித்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார்.தமிழ்.இ தெலுங்குஇ இந்திஇ மலையாளம் இகன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே மூன்றாம் பிறை மீண்டும் கோகிலா பிரியா சிவப்பு ரோஜாக்கள் வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் கமல்இ ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ஸ்ரீ விருது பெற்றவர். இவர் பிலிம்பேர் விருதுகள் மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!