பிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் !!

இந்திய தனியார் தொலைகாட்சியில் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Hassan) தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பொஸ் (Bigg Boss). முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன்  கொவிட் எனப்படும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஜூலை நடுப்பகுதியில் திரையிடப்பட வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் ஒக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 3 மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பிக்பொஸ் 4 தமிழ் ஒக்டோபர் முதல் வாரத்தில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்ற நிகழ்ச்சியின் கமலின் உரையாடலைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.

இந்நிலையில், அந்த வகையில் மொத்தம் பதினான்கு பிரபலங்கள் இதுவரை 11 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக்பொஸ் தமிழ் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல்:

1.சனம் ஷெட்டி

2.கிரன் ரதொட்

3.கரூர் ராமன்

4.ஷாலு ஷம்மு

5.ரியோ ராஜ்

6.அமுதவாணன்

7.அமிர்தா ஐயர்

8.சிவானி நாராயணன்

9.புகழ்

10.ஆர் ஜே வினோத்

11.பாலாஜி முருகதாஸ்

தொற்றுக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழு உறுப்பினர்கள் எடுத்து வருகின்றனர். உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களை வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் தனிமைப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!