ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – இயக்குனர் அறிவிப்பு

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் கூறியிருக்கிறார்.

‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘காட்டுப் புறா’ திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் 2000 ஆம் ஆண்டு நான் செய்த கான்செப்ட் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகள் படைத்துள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இதை பயன்படுத்தியதற்காக அவருக்கு மெயில், கடிதம், மியூசிக் யூனியன் வாயிலாக கேட்டு அவர் பதிலளிக்கவில்லை. என்னை அவருக்கு நன்றாக தெரியும். என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தியது எனக்கு பெருமை. இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுத்தலுக்காகவது ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கான்செப்ட் திருட்டு என்று லீகலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அதற்கும் பதில் இல்லை. அடுத்தகட்டமாக எப்.ஐ.ஆர் போடவுள்ளேன். இது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!