மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் : வடிவேலுவை புகழும் விவேக்!

நாட்டில் எந்தவொரு சம்வம் இடம்பெற்றாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதனை மீம்ஸாக வெளியிடுகிறார்கள். இவை அனேகமான பிரச்சினைகளில் தாக்கம் செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றுள் 90 சதவீதமான மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலுவின் நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி! எனக் குறிப்பிட்டு காணொளியொன்றையும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!