நடிகை லாவண்யா கர்ப்பம் கலைத்ததாக அவதூறு – நடிகர் மீது வழக்குப்பதிவு

நடிகை லாவண்யா திரிபாதி கருக்கலைப்பு செய்ததாக கூறிய நடிகர் ஸ்ரீராமோஜூ சுனிஷித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோதஜூ சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை தான் 2015-ல் திருமணம் செய்ததாகவும், தன்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லாவண்யா மலிவான விளம்பரத்திற்காக தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் தகவல்களை கூறிய சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை ஸ்ரீராமோஜூ மீது வழக்குப் பதிந்தது. இந்தநிலையில் தலைமறைவாகிவிட்ட அவரை காவல்துறை தேடி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!